தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Liquor Exclusion Minister Senthil Balaji Interviewed On The Death Of Fake Liquors

TASMAC: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்களா இல்லையா? செந்தில் பாலாஜியிடம் சரமாரி கேள்வி

Kathiravan V HT Tamil
May 17, 2023 05:09 PM IST

இது போன்ற சம்பங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் யாரும் கேட்கவில்லை-செந்தில் பாலாஜி

செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி
செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி:- டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்களா இல்லையா?

டாஸ்மாக் கடைகளில் தவறுகள் இருந்தால் கடை எண்ணை குறிப்பிட்டு புகார் சொன்னால் நிச்சயமாக விசாரிப்போம். இதுவரை 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 5.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களை பாதுக்காக்க தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட சில குறிப்பிட்ட மாவட்டங்களில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அப்பகுதிகளில் பார்கள் திறக்கப்படாமல் உள்ளது.

நடக்க கூடாத ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதில் முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். இது போன்ற சம்பங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் யாரும் கேட்கவில்லை. வரும் காலங்களில் இது போன்ற சூழல் நடந்து விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

கேள்வி:- போக்குவரத்து துறை முறைக்கேடு குறித்து உங்களை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?

நீதிமன்றத்தில் வழக்கின் அடிப்படையில் நேற்று தீர்ப்புகள் வரப்பெற்றுள்ளது. அந்த வழக்கில் புகார் செய்யும் போதும், வழக்குபதியும் போதும் என் பெயர் இல்லை, அதற்கு பிறகு அரசியல் சூழல்களுக்காக எனது பெயர் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை; மாறாக மூன்றாவது நபர்கள் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த வழக்கு 2 மாதத்தில் முடிக்க உத்தரவு வந்துள்ளது. வழக்கு முடிவுக்கு வர முழு ஒத்துழைப்பு தரப்படும்.

குட்கா கேஸில் மாட்டியவர் மந்திரியாகவும், டிஜிபியாகவும் உள்ளபோதெல்லாம் இந்த கேள்வியை கேட்கவில்லை. அவர்களிடம் இந்த கேள்விகளை கேட்டுவிட்டு என்னிடம் கேட்டால் நான் பதில் சொல்வேன்.

கேள்வி: பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என அண்ணாமலை, ஈபிஎஸ் ஆகியோர் கூறி உள்ளார்களே?

எதிர்க்கட்சித் தலைவர் முதல்வராக இருந்த போது குட்கா புகாரில் சிக்கிய டிஜிபி உள்ளிட்டோரை நீக்காதது ஏன்? அவர் மீது உள்ள வழக்கிற்கு நீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை வாங்கியது ஏன்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அவர் ராஜினாமா செய்திருக்கலாமே? டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன் என நான் ஏதும் சொல்லவில்லையே. கோடநாடு சம்பவத்தின் போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பதவி விலகாதவர் அரசியலுக்காக இப்படி பேசுகிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்