தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விரைவில் வெளியாகிறது அதிமுக ஊழல் பட்டியல்? அண்ணாமலை பேச்சால் வெடித்தது சர்ச்சை

விரைவில் வெளியாகிறது அதிமுக ஊழல் பட்டியல்? அண்ணாமலை பேச்சால் வெடித்தது சர்ச்சை

Kathiravan V HT Tamil
Apr 14, 2023 11:40 AM IST

தமிழ்நாடு அரசில் எந்த கட்சியெல்லாம் அமர்ந்திருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கொண்டு வரப்போகிறேன் - அண்ணாமலை

அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
அதிமுக முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான டெண்டர் விட்டதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு விஷயத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அடிப்படையில் இருந்து எதிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். 

திமுக ஊழல் பட்டியல் பார்ட் ஒன்றோடு முடியப்போவதில்லை, தமிழ்நாடு அரசில் எந்த கட்சியெல்லாம் அமர்ந்திருக்கிறதோ அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கொண்டு வரப்போகிறேன்.

நீங்கள் நினைப்பீர்கள் ’இவர் ஒரு கட்சியை மட்டும் எதிர்பார்’ என்று, அனைத்தையும் 2024 தேர்தலுக்கு முன்கொண்டு வருவேன். ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் அனைவரையும் மொத்தமாக எதிர்ப்போம்.

எதிர்க்க கூடாது என்றால் டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். அண்ணாமலை இருக்கும் வரை எதிர்ப்பான். காரணம் இது ஊழலுக்கு எதிரான போராட்டம்.

இது மோடிஜி வரும்பக்கூடிய அரசியல், கர்நாடகாவில் 224 வேட்பாளர் பட்டியலை மாற்றி உள்ளோம். மோடி ஜி விரும்பக்கூடிய அரசியலை நான் செய்கிறேன்.

யாருக்கும் பயந்தோ, பணிந்தோ குணிந்தோ, இவர்கள் தயவில் எம்.பி ஆக வேண்டும் என்று நான் வரவில்லை. பத்து தேர்தலில் தோற்றாலும் இங்குதான் நிற்பேன் என்றார்.

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எல்லா கட்சிகளின் சொத்துப்பட்டியலையும் 2024 தேர்தலுக்குள் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறி உள்ள நிலையில் அவர் அதிமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

”என்னை மாற்ற வேண்டும் என்றால் டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். யாருக்கும் பயந்தோ, பணிந்தோ குணிந்தோ, இவர்கள் தயவில் எம்.பி ஆக வேண்டும் என்று நான் வரவில்லை. பத்து தேர்தலில் தோற்றாலும் இங்குதான் நிற்பேன்” என்ற அவரின் ஆவேச பேச்சு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தரும் மறைமுக பதில் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்