தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nagercoil Accident: அரசுப்பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் சம்பவ இடத்திலே பலியான சோகம்!

Nagercoil Accident: அரசுப்பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் சம்பவ இடத்திலே பலியான சோகம்!

Karthikeyan S HT Tamil
May 12, 2023 09:29 AM IST

Nagercoil Accident: நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

நாகர்கோவில் விபத்து
நாகர்கோவில் விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கன்னியாகுமரிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரில் 12 பேர் பயணம் செய்த நிலையில் அவர்களது கார் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமடம் பகுதியில் எதிரே வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காரில் பயணம் செய்த 12 பேரில் ஓட்டுநர் உட்பட 4 சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழியில் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதிய அரசு பேருந்து - நடத்துநர் உள்பட 4 பேர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் பாதரகுடி அருகே வேகமாக வந்த அரசு சொகுசு பேருந்து, டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து நடத்துநர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு சொகுசு பேருந்தை ஓட்டுநர் சாலையின் இடது புறமாக திருப்ப முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்