தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmk Stands For Dynasty Politics And Money Laundering Says Bjp Head J.p. Nadda

DMK: 'திமுக என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டப்பஞ்சாயத்து' - பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு!

Marimuthu M HT Tamil
Feb 11, 2024 10:04 PM IST

திமுக என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டப்பஞ்சாயத்து என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

திமுக என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டப்பஞ்சாயத்து - ஜே.பி.நட்டா
திமுக என்றால் வாரிசு அரசியல், பணமோசடி, கட்டப்பஞ்சாயத்து - ஜே.பி.நட்டா

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது விழா மேடையில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, '' திமுக ஆட்சியில் தமிழ்நாடு சீர்கெட்டு வருகிறது. மாநில அரசுக்கு மனசாட்சி மற்றும் ஜனநாயகம் என்பது இல்லை. நான் வரும்போது கூட தெருவிளக்குகள் இல்லாமல் இருந்தன. நாட்டில் தமிழ்நாட்டின் பங்கு பிரதானமானது. பாஜக முக்கியத் தலைவர்களின் மனதில் தமிழ்நாட்டுக்கு தனி இடம் உண்டு. பிரதமர் மோடிக்கு பிடித்த மாநிலம், தமிழ்நாடு. பிரதமர் மோடி எவ்விடம் சென்றாலும் தமிழ் குறித்தும் தமிழ்நாடு குறித்தும் உரையாற்றுகிறார். நாட்டின் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டைச் சார்ந்த வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் தமிழ்நாடு சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. நண்பர்களே சிறிது நாட்களுக்கு முன்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல்செய்த பட்ஜெட்டில் அடிப்படை வேலை செய்யும் அத்தனைபேரையும் ‘ஆயுஷ்மான்’திட்டத்தில் இணைத்து இருக்கிறார். 

சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பவர்களுக்கு 300 யூனிட் வரை மின்சாரக் கட்டணம் கிடையாது எனக் கூறியிருக்கிறார். இதன்மூலம் 16ஆயிரம் ரூபாய் முதல் 18ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். ’தற்சார்பு பாரதம்’என்னும் திட்டத்தின்மூலம் 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆவார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

திராவிட முன்னேற்றக்கழகம் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இலவசமாக அரிசி வழங்கும் திட்டத்தில் 80 கோடி பேர் பயன் அடைகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் 77 லட்சம் மக்கள் பயன் அடைகின்றனர். தமிழ்நாட்டில் 38 லட்சம் மக்களுக்கு இலவச கேஸ் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நாடு முழுவதும் 4 கோடி பேருக்கு வீடுகட்டித் தந்திருக்கிறோம். அதில் தமிழ்நாட்டில் 14 லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம். விவசாயிகளுக்கு கெளரவத்தொகை ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் அளித்து வருகிறோம். தமிழ்நாட்டில் 38 லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை கொடுக்கப்பட்டுள்ளது. 

DMK-வின் விரிவாக்கம் தெரியுமா, D for Dynasty (வாரிசு அரசியல்), M for Money Swindling (பண மோசடி), K for Katta Panchayathu (கட்டப் பஞ்சாயத்து) ஆகியவை சேர்ந்தது தான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மகன், அவரது பெயரன் மட்டுமே திமுகவில் பொறுப்புகளில் இருக்க முடியும்.

நாடு முழுக்க வாரிசு அரசியல் தான் நடக்கிறது. வாரிசு அரசியல் செய்பவர்களிடம் தான் சொத்துகள் இருக்கின்றன.

நண்பர்களே, இங்கு 200 நாட்கள் ஒரு அமைச்சர் ஜெயிலில் இருக்கிறார். அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவருக்கும் அமைச்சரின் சம்பளம் சென்றுகொண்டுதான் இருக்கிறது.

திமுக சொன்னதை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவுக்கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வோம் என்றார்கள். அந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்