தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pudukkottai: ‘சேர் இல்லையா?’ குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி.,!

Pudukkottai: ‘சேர் இல்லையா?’ குடியரசு தின விழாவை புறக்கணித்த திமுக எம்.பி.,!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 26, 2023 11:57 AM IST

பார்வையாளர் பகுதியில் அமர்வதற்காக வந்தபோது எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது.

புதுக்கோட்டை குடியரசு தின விழாவில் அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தனக்கு இருக்கை இல்லாததால் அங்கிருந்து புறப்பட்ட திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா
புதுக்கோட்டை குடியரசு தின விழாவில் அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தனக்கு இருக்கை இல்லாததால் அங்கிருந்து புறப்பட்ட திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் விழா நடைபெறும் சேமப்படை மைதானத்தில் பார்வையாளர்கள் அரசு நடைமுறை விதிகளின்படி(protocal) படி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் மட்டுமல்லாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்பி மற்றும்  எம்எல்ஏ உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது நடைமுறை.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு இருக்கைகளும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா சேமப்படை மைதானத்திற்கு வருகை தந்தார். 

அப்போது அவர் பார்வையாளர் பகுதியில் அமர்வதற்காக வந்தபோது எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது. இது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்ட போது, சரிவர பதில் வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் தனது காரில் ஏறி சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது.

இருக்கை விவகாரத்தை காரணம் காட்டி, எம்.பி., ஒருவர் குடியரசு தின விழாவை புறக்கணித்துச் சென்ற விவகாரம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ., முத்துராஜா, குடியரசு தின விழாவில் இறுதி வரை பங்கேற்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்