தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sathuragiri Temple: சித்திரை மாத பவுர்ணமி..சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

Sathuragiri Temple: சித்திரை மாத பவுர்ணமி..சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

Karthikeyan S HT Tamil
May 01, 2023 10:36 AM IST

Sathuragiri Temple: சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி கோயில்
சதுரகிரி கோயில்

இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் பிரதோஷம் மற்றும் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 3 ஆம் தேதி முதல் (மே 3) 6 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் கோயிலில் தங்க அனுமதி இல்லை.

மேலும், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி சென்று கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்