தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஈரோடு இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை 2 நாட்கள் பிரச்சாரம்!

ஈரோடு இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை 2 நாட்கள் பிரச்சாரம்!

Divya Sekar HT Tamil
Feb 12, 2023 11:37 AM IST

Annamalai 2 days campaign : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மறைந்த ஈவேரா திருமகனின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போடியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் பல்வேறு பிரச்சனைகளை கடந்து இரட்டை இலைசின்னத்தில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. நேற்று முன் தினம் மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

முன்னதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். இதனையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 14 நாட்கள் உள்ள நிலையில் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

கமல்ஹாசன் வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் 3 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார். அதேபோல திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பிப்ரவரி 24,25ஆம் தேதிகளில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி அவர் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்