தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ttv At Erode: ‘ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்பு’ டிடிவி அறிவிப்பு!

TTV At Erode: ‘ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிட வாய்ப்பு’ டிடிவி அறிவிப்பு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 20, 2023 12:53 PM IST

TTV Press meet: ஈரோடு கிழக்கில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட வேண்டும் என அனைவரும் விரும்புவதாகவும், தான் கூட போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் டிடிவி பேசினார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  -கோப்புபடம்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் -கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளோடு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் கூறுகையில்,1

‘‘ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் உட்பட அனைத்து நிர்வாகிகளும் விரும்புவதாக தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளோடு தொடர்ந்து ஆலோசித்து போட்டியிடுவதா என்பது குறித்த அறிவிப்பை 27 ஆம் தேதி வெளியிடுவதாகவும் கூறினார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாகவும் அதற்கு தேவையான பணிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.

 அதிமுகவை பொறுத்த வரையில் இரட்டை இலை சின்னம் தான் தற்போது தலைமை தாங்கி இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி பண பலத்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் அவர் கூறினார். ஈரோடு கிழக்கில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட வேண்டும் என அனைவரும் விரும்புவதாகவும், தான் கூட போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் பேசினார். தேர்தலில் நிற்பதற்கு பயப்படவில்லை எனவும் ஆர் கே நகர் தொகுதியில் திமுகவை டெபாசிட் இழக்க செய்ததும் நாங்கள்தான் எனவும் டிடிவி தினகரன் பேசினார். 

அதிமுகவின் பொதுச் செயலாளர் என சசிகலா கூறிக் கொண்டிருக்கும் சூழலில் அவரை எப்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பிரச்சாரத்திற்கு அழைப்பது எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். தேர்தல் தோல்வியை கண்டு தாங்கள் துவண்டு போகவில்லை எனவும் கஜினி முகமது தொடர்ந்து படை தொடுத்தது போல தொடர்ந்து தேர்தலை சந்திப்போம் எனவும் டிடிவி தினகரன் கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்