தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Vs Bjp: ‘இனி நாம ஒன்றாகலாம்.. ஆனால் தொண்டர்கள்..?’ நட்டா-அதிமுக சந்திப்பில் நடந்தது இது தான்!

ADMK vs BJP: ‘இனி நாம ஒன்றாகலாம்.. ஆனால் தொண்டர்கள்..?’ நட்டா-அதிமுக சந்திப்பில் நடந்தது இது தான்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 24, 2023 12:58 PM IST

AIADMK vs TN BJP: ‘பாஜகவின் அரசியல் தந்திரத்தில், அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை அவர்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை’

டில்லி பாஜக தலைமை மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை என்ன?
டில்லி பாஜக தலைமை மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘தமிழகத்தின் பாஜக தலைவராக, அண்ணாமலை விமர்சிக்க வேண்டியது திமுகவா? அல்லது தோழமை கட்சிகளையா? 

தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் ஏன் ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்றனர்? இவர்களாக போயிருந்தால், அவர்கள் சந்திப்பு அனுமதி கேட்கும் போதே விசயம் வெளியே வந்துவிடும். ஆனால் திடீரென்று கிளம்பிச் செல்கிறார்கள். 

அதுவும் கேரளாவின் கொச்சியில் இருந்து டில்லி செல்கிறார்கள். அப்படி ரசியமாக அவர் செல்ல காரணம், அதை பாஜக தான் ஏற்படுத்தியிருக்க வேண்டும். நிறைய பேர் நினைக்கிறார்கள், செய்திகள் வருகிறது, ‘அமித்ஷாவை அதிமுகவினர் சந்திக்க முயற்சித்தாகவும், அவர் மறுத்ததாகவும்’ என்று. 

இந்த சந்திப்பு, முழுக்க நட்டாவுடன் ஏற்பாடு செய்திருந்தது தான். அமித்ஷா உடன் இல்லை. அமித்ஷாவை சந்திப்பது என்றால், அது எடப்பாடி தான் சரியாக இருக்கும். தற்போது சென்றவர்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள். இவர்கள் நட்டாவை தான் சந்திக்க முடியும். 

‘அண்ணாமலை தொடர்ந்து இதுபோல் பேசினால், கூட்டணி சாத்தியம் இல்லை என்கிற தகவலை அவர்கள் நட்டாவிடம் கூறியுள்ளனர். அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும், வார்த்தைகளை திரும்ப பெறவேண்டும். நாங்கள் அண்ணா பெயரில் கட்சி நடத்துகிறோம், இப்படி தொடர்ந்து பேசினால், கூட்டணி விரிசல் தான் ஏற்படும். நாம் ஒன்றானாலும் கூட, தொண்டர்கள் ஒன்று சேர மாட்டார்கள்’ என்பதை தெளிவாக நட்டாவிடம் கூறியிருக்கிறார்கள்.

அத்தோடு, 5 சீட்டுக்கு மேல் கிடையாது என்பதையும் உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள். பாஜக இதை எதிர்பார்க்கவில்லை. அதிமுக கெஞ்சும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். பாஜகவின் அரசியல் தந்திரத்தில், அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை அவர்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை. 

அதற்குள், அடுத்த அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் தருவதாக பேசப்பட்டது என்பதெல்லாம் இப்போதைக்கு அவசியமற்ற பேச்சுவார்த்தை. இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை, அதற்குள் அமைச்சரவை பங்கீடை எப்படி பேசுவார்கள்? இப்போ எப்படி அதைப் பற்றி பேச முடியும்? அதைப்பற்றியெல்லாம் பேசவே இல்லை.

இந்த சந்திப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.யாருக்கும் அது பற்றி தெரியாது. அதிமுக குழு டில்லி போய் இறங்கிய பிறகு தான் செய்தியே கசிந்தது. அதுவரை ரகசியமாக தான் அது வைக்கப்பட்டுள்ளது. 

இந்த சந்திப்பை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். பாஜக தலைமையிடம் இருந்து வந்த அழைப்பில் தான் அதிமுக குழு சென்றது. இப்போதைக்கு யார் முதலில் கூட்டணியில் இருந்து விலகுகிறார்கள் என்கிற ரேஸ். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், அதிமுக தான் முதலில் வெளியேறும். அந்த இடத்திற்கு இந்த விவகாரம் போய்விட்டது. இந்த விவகாரத்தில் பாஜக தான் இறங்கி வர முடியும். அதற்கு ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வு நடந்தால் தான் உண்டு. 

இறுதி நேரத்தில் தான் இந்த கூட்டணி தொடருமா இல்லையா என்று தெரியும். இதில், எடப்பாடியின் ஆளுமையை வைத்து தான் கூட்டணி தீர்மானிக்கப்படும். ‘ஓபிஎஸ், டிடிவியை சேர்க்க முடியாது, நீங்கள் கேட்கும் சீட் தரமுடியாது’ என்கிற முடிவுக்கு எடப்பாடி வந்த பின், பாஜக தான் இறங்கி வர வேண்டும். அவர்கள் வந்தால் கூட்டணி தொடரலாம். 

எடப்பாடியை பொருத்தவரை, ‘வந்தால் சந்தோசம்.. வராவிட்டால் மிகமிக சந்தோசம்’ என்கிற நிலையில் தான் இருக்கிறார். பாஜக உடன் கூட்டணியோடு இல்லை என்பதை ஜெயக்குமார் அறிவித்தபின், அதிமுக தொண்டர்களிடம் இருந்த உற்சாகத்தை பார்க்க முடிந்தது. அதை எடப்பாடி பழனிச்சாமி புரிந்துகொண்டுள்ளார். 

பெரும்பாலானோர் சொல்கிறார்கள், ‘தினகரன், ஓபிஎஸ்.,யை சேர்த்துக் கொண்டால் என்ன?’ என்று. ஆட்சியில் இருந்த 4 ஆண்டில், அவர்கள் இருவரால் தானே கட்சியில் பிரச்னை இருந்தது. அப்பாடா.. என்று கட்சி ஒரு வழியாக இப்போது செட்டில் ஆன பிறகு, மறுபடி அவரே பிரச்னையை தன் பக்கம் இழுத்துக் கொள்வாரா?,’’

என்று அந்த பேட்டியில் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்