தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk Vs Bjp: ’ராமரை ஏமாற்றினால் நிச்சயம் தண்டனை கிடைக்கும்!’ அண்ணாமலையை விளாசும் கே.பி.முனுசாமி!

ADMK Vs BJP: ’ராமரை ஏமாற்றினால் நிச்சயம் தண்டனை கிடைக்கும்!’ அண்ணாமலையை விளாசும் கே.பி.முனுசாமி!

Kathiravan V HT Tamil
Jan 27, 2024 11:32 AM IST

”1998ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் வடமாநிலத்தில் மட்டும் இருந்த பாஜகவை தென் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான்”

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி,முனுசாமி - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி,முனுசாமி - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி:- அதிமுகவில் இருந்த டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறதே?

இவர்கள் பாஜகவுக்கு ஆதரவு த்ரெரிவிக்கும் காரணத்தால் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் கடுமௌஇயாக கோபத்திற்கு உள்ளாவன். காரணம் அதிமுகவை காப்பாற்றிய ஜெயலலிதா அவர்களை பற்றியும், எடப்பாடியார் பற்றியும், அதிமுகவை பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்களை சில பாஜக தலைவர்கள் முன் வைத்துள்ளனர். அத்தகைய நபர்களோடு இவர்கள் சென்றால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வீறுகொண்டு எழுந்து வேகத்தோடு செயல்படுவான். 

கேள்வி:- எம்ஜிஆர் என்றால் ஒருவர்தான் இருக்க முடியும் என்பது போல் மோடி என்றால் ஒருவர்தான் இருக்க முடியும் என அண்ணாமலை கூறி உள்ளாரே?

என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது ஊடகங்களை அழைத்து தான் என்ன மனதில் நினைக்கிறாரோ அதை பேட்டிக்கொடுத்து வருகிறார். அவர் சுற்றுப்பயணம் செய்யாமல் கமலாயத்தில் கொடுக்கும் பேட்டியைத்தான் இந்த யாத்திரையிலும் கொடுத்து வருகிறார். 

1998ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் வடமாநிலத்தில் மட்டும் இருந்த பாஜகவை தென் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். 

கேள்வி:- தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம் என அண்ணமலை கூறி உள்ளாரே?

அவர் என்ன பேசுகிறார் என்பதே தெரியவில்லை, எனக்கு வன்மம் உள்ளதாக கூறுகிறார். அண்ணாமலை தனது கட்சியை முன்னிலைப்படுத்தாமல், தன்னை முன்னிலைப்படுத்துகிறார். கட்சியை பின்னிலைப்படுத்தி அவரை முன்னிலைப்படுத்த முயல்கிறார்.  பாஜகவை தொடங்கிய வாஜ்பாய் பற்றி அண்ணாமலை பேசாமல் நரேந்திரமோடியை பற்றி மட்டுமே பேசுகிறார். 

கேள்வி:- அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதால் பாஜக ஓட்டுவங்கி அதிகரிக்குமா? 

ராமர் அனைவருக்கும் தெய்வம்; அந்த தெய்வைத்தை வைத்து யாராவது ஏமாற்றினால், அந்த தெய்வம் சும்மா இருக்காது. அதற்குரிய தண்டனையை ராமபிரான் வழங்குவார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்