Ind vs Aus 1st Odi: 5 பெளலர்களுடன் களமிறங்கும் இந்தியா! ஆஸி. முதல் பேட்டிங்
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், விரைவில் தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடருக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த ஒரு நாள் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் அங்கமாக இடம்பிடிக்காவிட்டாலும், வரும் நவம்பரில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு இரு அணிகளும் ஒத்திகை பார்த்துக்கொள்ளும் விதமாக அமைகிறது.
இதையடுத்து முதல் போட்டி நடைபெற இருக்கும் வான்கடே மைதானத்தின் ஆடுகளத்தை பொறுத்தவரை புற்கள் சமமான அளவில் இடம்பிடித்திருப்பதால், பந்து வீச்சாளர்களிடமிருந்து நல்ல பவுன்சர்களை எதிர்பார்க்கலாம் எனவும், இரவில் பனிபொலிவு வரும் பட்சத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்குவிப்பில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.