Coco Gauff: பிரான்ஸ் வீராங்கனையை வீழ்த்தி மியாமி ஓபன் டென்னிஸில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய கோகோ காஃப்
Coco Gauff in Miami Open Tennis: அமெரிக்காவில் கடந்த 23 போட்டிகளில் கோகோ காஃப் ஒரேயொரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் இந்தியன் வெல்ஸ் போட்டியில் மரியா சக்காரிக்கு எதிராக அந்த தோல்வி ஏற்பட்டது. மார்ச் 13 அன்று 20 வயதை எட்டினார் கோகோ காஃப்.

அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் (Photo by AL BELLO / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP) (Getty Images via AFP)
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கோகோ காஃப் 6-4, 6-0 என்ற நேர் செட்களில் பிரான் வீராங்கனை ஒசேன் டோடினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் செட்டில் டோடின் 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற பிறகு காஃப் தொடர்ந்து 10 கேம்களை வென்றார், முக்கியமான தருணங்களில் டோடின் செய்த ஒன்பது டபுள் எரர்ஸ் கோகோவுக்கு சாதகமாக அமைந்தது.
அமெரிக்காவில் கடந்த 23 போட்டிகளில் கோகோ காஃப் ஒரேயொரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் இந்தியன் வெல்ஸ் போட்டியில் மரியா சக்காரிக்கு எதிராக அந்த தோல்வி ஏற்பட்டது.
