தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Turkey: துருக்கிக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களுடன் விரைந்த Ndrf குழு

Turkey: துருக்கிக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களுடன் விரைந்த NDRF குழு

Manigandan K T HT Tamil
Feb 07, 2023 11:12 AM IST

Earthquake in Turkey: இன்று காலை மீண்டும் இரண்டாவது நாளாக துருக்கியில் சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி செல்லும் என்டிஆர்எஃப் வீரர்கள்
துருக்கி செல்லும் என்டிஆர்எஃப் வீரர்கள் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை மீண்டும் இரண்டாவது நாளாக துருக்கியில் சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியா உள்பட பல நாடுகள் துருக்கிக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தன.

அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் நகரில் இருந்து என்டிஆர்எஃப் படைக் குழுவினர் இன்று துருக்கி விரைந்தனர்.

என்டிஆர்எஃப் துணை கமாண்டர் தீபக் தல்வார் கூறுகையில், "3 சீனியர் அதிகாரிகள் உள்பட 50 பேர் கொண்ட டீம் மீட்புப் பணிகளுக்காக புறப்பட்டுள்ளது. ஐ.நா.வின் வழிகாட்டுதல்களின்படி மீட்புப் பணி நடைபெறும்.

இரண்டு குழுவை அனுப்ப எங்களுக்கு உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது. மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளும் துருக்கியில் நமது என்டிஆர்எஃப் வீரர்கள் செய்வார்கள். மருத்துவ உபகரணங்களும் உள்ளன. துணை மருத்துவ ஊழியர்களும் உள்ளனர் என்றார் அவர்.

துருக்கி நிலநடுக்கம் - வைரலாகும் ஆராய்ச்சியாளரின் பழைய டிவீட்…

என்டிஆர்எஃப்-ன் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி பிரிவு டிஐஜி மோசன் சஹிதி கூறுகையில், "துருக்கி மற்றும் சிரியாவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. HADR (மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்) நடவடிக்கைகளின் கீழ், NDRF இன் இரண்டு குழுக்களை துருக்கிக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இரண்டு குழுக்களையும் சேர்த்து 101 வீரர்கள் இருப்பார்கள்" என்றார்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) செயல்பாட்டில் உள்ளது. NDRF தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள், மருத்துவப் பொருட்கள், துளையிடும் இயந்திரங்கள் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடன் நிலநடுக்க நிவாரணப் பொருட்களின் முதல் தொகுதி செல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

IPL_Entry_Point