தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Turkey Earthquake: 8 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய பேரிடர் மீட்புக்குழு!

Turkey Earthquake: 8 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய பேரிடர் மீட்புக்குழு!

Divya Sekar HT Tamil
Feb 12, 2023 09:20 AM IST

இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 8 வயது சிறுமியை இந்திய தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

 8 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய பேரிடர் மீட்புக்குழு
8 வயது சிறுமியை உயிருடன் மீட்ட இந்திய பேரிடர் மீட்புக்குழு

ட்ரெண்டிங் செய்திகள்

துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. தென்கிழக்கு துருக்கியில் குறைந்தபட்சம் 81 எண்ணிக்கையிலான 4 ரிக்டர் நிலநடுக்கங்கள், 20 எண்ணிக்கையிலான 5 ரிக்டர் நிலநடுக்கங்கள், மூன்று எண்ணிக்கையிலான 6 ரிக்டர் நிலநடுக்கங்கள் மற்றும் இரண்டு 7 ரிக்டர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மீட்பு பணிகளில் இந்தியா உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாட்டின் பேரிடர் மீட்பு படைகளையும் நவீன இயந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும் மருந்து பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளன.

இடிபாடுகளில இருந்து குவியல் குவியலாக சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளின் பேரிடர் மீட்புப்படையினர் துருக்கி வீரர்களுடன் சேர்ந்து ஏராளமான மக்களை உயிருடன் மீட்டனர். குறிப்பாக இந்தியா சார்பில், 'Operation Dost' செயல்படுத்தப்பட்டது. இந்த ஆப்ரேஷன் மூலம் சுமார் 6 விமானங்களில் இந்திய பேரிடர் மீட்புப்படையினர் துருக்கி சென்றுள்ளனர்.

வீரர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் மீட்பு பணிக்கு உதவியாக நாய்கள், தொழில்நுட்ப கருவிகள் மருந்துகள் மற்றும் 30 படுக்கைகள் கொண்ட மொபைல் மருத்துவமனையும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காசியன்டெப் நகரில் நேற்று பகல் 3.45 மணிக்கு இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் 8 வயது சிறுமியை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டுள்ளது. 

இதை அந்தப் படை டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அந்தப்பதிவில், "கடின உழைப்பும், ஊக்கமும் கை கொடுத்து இருக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், துருக்கி ராணுவத்துடன் சேர்ந்து மேலும் ஒரு சிறுமியை மீட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் அதே காசியன்டெப் நகரில் பேரென் என்ற பகுதியில் இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி ஒருவரை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்