தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi: மும்பையில் புதிய மெட்ரோ ரயில்கள்.. ரூ.38,000 கோடி திட்டங்கள்!

PM Modi: மும்பையில் புதிய மெட்ரோ ரயில்கள்.. ரூ.38,000 கோடி திட்டங்கள்!

Manigandan K T HT Tamil
Jan 19, 2023 09:41 AM IST

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ரூ.38,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். மும்பை பயணத்தின் போது இரண்டு மெட்ரோ ரயில் பாதைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி (MINT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

ரூ.12,600 கோடி மதிப்பிலான மும்பை மெட்ரோ ரயில் பாதைகள் '2A மற்றும் 7'-ஐ பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவுள்ளார். பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் நடைபெறும் விழாவில் ஏழு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், சாலை கான்கிரீட் திட்டம் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மறுமேம்பாடு திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி, டிரோன்கள், பாராகிளைடர்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல்டு மைக்ரோ-லைட் விமானங்களின் பயன்பாடு உள்ளிட்ட பறக்கும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பி.கே.சி மற்றும் மும்பையின் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களின் எல்லைக்குள் பிரதமரின் வருகையைக் கருத்தில் கொண்டு நண்பகல் முதல் நள்ளிரவு வரை டிரோன் உள்ளிட்ட பறக்க அனுமதிக்கப்படாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் ஒரு சில சாலைகள் வாகனங்கள் செல்ல மூடப்படும் என்றும், வேறு சில பாதைகளில் போக்குவரத்து திருப்பி விடப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

18.6 கிமீ நீளமுள்ள மும்பை மெட்ரோ ரயில் பாதை 2A புறநகர்ப் பகுதியான தஹிசரை (கிழக்கு) 16.5 கிமீ நீளமுள்ள டிஎன் நகர் (மஞ்சள் கோடு) உடன் இணைக்கிறது. அதே நேரத்தில் மெட்ரோ பாதை 7 அந்தேரியை (கிழக்கு) தஹிசார் (கிழக்கு) உடன் இணைக்கிறது. இந்த பாதைகளுக்கு பிரதமர் மோடி 2015ல் அடிக்கல் நாட்டினார்.

மேலும், பிரதமர் மோடி மும்பை 1 மொபைல் ஆப் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை (மும்பை 1) அறிமுகப்படுத்துகிறார்.

மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்களில் இந்தச் செயலியை பயன்படுத்தி உள்ளே செல்லலாம். UPI மூலம் டிக்கெட் வாங்குவதற்கு டிஜிட்டல் பேமெண்ட்டையும் இந்தச் செயலி ஆதரிக்கிறது.

மொபிலிட்டி கார்டு முதலில் மெட்ரோ காரிடார்களில் பயன்படுத்தப்படும் மற்றும் உள்ளூர் ரயில்கள் மற்றும் பேருந்துகள் உட்பட பிற வெகுஜன போக்குவரத்து முறைகளுக்கும் இந்த சேவை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்