தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mumbai Crime: திருடனை பிடிக்க டாக்டர் வேடத்தில் சென்ற போலீஸார்! என்ன நடந்தது?

Mumbai Crime: திருடனை பிடிக்க டாக்டர் வேடத்தில் சென்ற போலீஸார்! என்ன நடந்தது?

Manigandan K T HT Tamil
Feb 07, 2023 10:13 AM IST

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் XI மண்டலம் காவல் துறையினர் ஆம்புலன்சில் மருத்துவர்களாகவும், நோயாளிகளாகவும் வேடமிட்டு 2 திருடர்களை மடக்கி பிடிக்க காத்திருந்தனர்.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் XI மண்டலம் காவல் துறையினர் ஆம்புலன்சில் மருத்துவர்களாகவும், நோயாளிகளாகவும் வேடமிட்டு 2 திருடர்களை மடக்கி பிடிக்க காத்திருந்தனர்.

இந்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்துள்ளது. 2 திருடங்களில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

மொத்தம் 26 போலீஸார் இந்த நாடகத்தை அரங்கேற்றி திருடனை பிடித்தனர். பெண்களிடம் இருந்து செயனினை பறித்துக் கொண்டு ஓடி பல நாட்களாக பிடிபிடாமல் இருந்துவந்த சையது ஜகீர் என்கிற சங்கா போலீஸிடம் பிடிபட்டான்.

சையது ஜகீருக்கு எதிராக 27 வழக்குகள் உள்ளன. இவன் இரானி கேங்கை சேர்ந்தவன் ஆவான். ஜகீருக்கு எதிராக மோசடி வழக்கும் பதிவாகியுள்ளது. இதில் 3 வழக்குகள் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அம்பிவலி பகுதியில் ஜகீர் நடமாட்டம் இருப்பது சிசிடிவி கேமரா மூலம் கண்டறியப்பட்டது. ஏற்கனவே அவனை பிடிக்க முயன்றும் எப்படியோ போலீஸார் வருவதை அறிந்து தப்பி ஓடிவிடுவான்.

இதனால், இந்த முறை எப்படியாவது அவனை கைது செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டது.

இந்த முறை மூத்த காவல் ஆய்வாளர் சுதீர் குடல்கர், ஏபிஐ அகிலேஷ் பாம்பே ஆகியோர் அந்தப் பகுதியை நன்கு நோட்டமிட்டனர்.

துணை கமிஷ்னர் அஜய்குமார் பன்சால் வழிகாட்டுதல்படி அந்த மோசடி பேர்வழி குறித்த தகவல்கள் அனைத்தும் முன்கூட்டியே திரட்டப்பட்டன.

அதன்பிறகு தான் மாறுவேடத்தில் சென்று அவனை கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளான் அந்த பலே திருடன்.

திருடனை கைது செய்தது எப்படி?

அம்பிவலி பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கு 2 ஆம்புலன்ஸ் மற்றும் 3 கார்களில் சென்றனர்.

யாரும் திருடனுக்கு தகவல் கொடுத்து விடக் கூடாது என்ற காரணத்துக்காக டாக்டர்கள் நோயாளிகள் வேடத்தில் 26 காவலர்கள் சென்றனர்.

அப்போது இமாம்படா பகுதியில் டீ ஸ்டால் அருகே சையது ஜகீர் நின்று கொண்டிருந்ததை போலீஸார் கண்டறிந்தனர்.

அவர்களை நோக்கி மும்பை பதிவு பெற்ற வாகனங்கள் வருவதை அறிந்து சுதாரித்துக் கொண்ட தப்பியோடி முயற்சி செய்தபோது போலீஸார் சுற்றி வளைத்தனர்.

ஆம்புலன்ஸ்கள் மற்றும் கார்கள் இரண்டு மீட்டர் தூரம் நகர்ந்தபோது அங்கு கும்பல் திரண்டது. மேலும் வாகனங்கள் மீது கற்களை வீச எறியத் தொடங்கினர்.

ஒரு ஆம்புலன்ஸ் அந்த இடத்தை விட்டு சென்றுவிட, ஜகீர் இருந்த மற்றொரு ஆம்புலன்ஸ் அந்த கும்பலிடம் மாட்டிக் கொண்டது.

பின்னர், காரில் இருந்த அதிகாரிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு மற்றொரு ஆம்புலன்சையும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். கல்வீச்சில் சில காவலர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்