Healthy Foods: சளி முதல் வறண்ட தோல் வரை..! பல்வேறு பாதிப்புகளை குணமாக்கும் உணவுகள்
உங்கள் அன்றாட உணவோடு சில சத்துமிக்க சில உணவுகளை சேர்த்து வருவதன் மூலம் பல்வேறு உடல்நல பாதிப்புகள் குணமாவதுடன், ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.

நாம் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்துகளின் அடிப்படையில்தான் உடலின் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. சமநிலையான உணவுமுறை பல்வேறு நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. நாம் உண்ணும் உணவிலேயே இதய நோய், நீரழிவு, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது.
குளிர்காலம், கோடைகாலம் என எந்த காலமாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி பழங்கள், கீரைகள், ஓட்ஸ், பார்லே, பிரவுன் அரிசி, பாஜ்ரா உள்ளிட்டவற்றை உங்களது உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளலாம்.
இருமல் உண்டாவது ஏன்?
இருமல் பாதிப்பு நுரையீரலை பாதுகாக்க நிகழும் இயற்கை நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. நுரையீரல் பாதையல் கிருமிகள், புகையின் காரணமாக ஏற்படும் அரிப்புகளை போக்க இருமல் உண்டாவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நோய் தொற்று ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.