21 years of Kannathil Muthamittal: ‘நெஞ்சில் ஜில் ஜில்.. கன்னத்தில் முத்தமிட்டால்’-ஒரு சிறுகதைதான் படமாச்சு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  21 Years Of Kannathil Muthamittal: ‘நெஞ்சில் ஜில் ஜில்.. கன்னத்தில் முத்தமிட்டால்’-ஒரு சிறுகதைதான் படமாச்சு தெரியுமா?

21 years of Kannathil Muthamittal: ‘நெஞ்சில் ஜில் ஜில்.. கன்னத்தில் முத்தமிட்டால்’-ஒரு சிறுகதைதான் படமாச்சு தெரியுமா?

Manigandan K T HT Tamil
Feb 14, 2024 05:50 AM IST

இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற காட்சிகள்
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற காட்சிகள்

படத்திற்கு ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்தார். இலங்கை உள்நாட்டுப் போரின் நடுவே தனது தாயை சந்திக்கும் ஆசை கொண்ட இந்தியப் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் பெற்றோரின் குழந்தையின் கதைதான் இது. இது 14 பிப்ரவரி 2002 அன்று வெளியிடப்பட்டது.

இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்படம் 2002 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் 2003 சான் பிரான்சிஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. திரைப்படம் வெளியானவுடன் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. மேலும் ஆறு தேசிய திரைப்பட விருதுகள், மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகள்,  ஆறு சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், ஏழு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் ஆறு சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்பட விருதுகளை வென்றது.

எம்.டி.சியாமா (நந்திதா தாஸ்) இலங்கையில் தனது கணவனுடன் வசித்து வருகிறார். அப்போது போர் நடக்கும் எச்சரிக்கை வர என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். அப்போது அவர்கள் படகில் ஏற்றிவிடப்பட்டு ராமேஸ்வரம் செல்கிறார்கள். தனது கணவன் இலங்கை இராணுவத்திடம் மாட்டிக் கொண்டதால் தன்னுடன் தன் கணவனை அழைத்து செல்ல முடியாத சியாமா தனியாக செல்கிறாள். ராமேஸ்வரத்தில் அகதிகள் முகாமில் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

அந்த பெண் குழந்தையை திருச்செல்வமும் (மாதவன்) இந்திராவும் (சிம்ரன்) தத்தெடுத்துக் கொள்கின்றனர். இக்குழந்தை உரிய வயதை எய்தியதும் பெற்றோர்கள் இவளிடம் தத்தெடுக்கப்பட்ட விவரத்தைக் கூற, அச்சிறுமி பலவிதமான உணர்ச்சித் தத்தளிப்புகளுக்கு ஆளாகிறாள். தன் தாயைக் காண இவள் ஆர்வம் கொள்வதால், வளர்ப்புப் பெற்றோர் இவளை இலங்கைக்கு அழைத்துச் செல்கின்றனர். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், தாயை கண்டார்களா என்பதும் தான் படம்.

விடை கொடு எங்கள் நாடே, நெஞ்சில் ஜில் ஜில், வெள்ளை பூக்கள் என இப்படத்தில் ஒவ்வொரு படமும் மனதில் நீங்கா இடம்பிடித்தது. விடை கொடு எங்கள் நாடே பாடலை பழம்பெறும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி பாடியிருந்தார்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். பாடல் காட்சிகள், இலங்கை சம்பந்தப்பட்ட காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கமும் அருமையானதாக இருக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.