William Shakespeare: ஆங்கில இலக்கியத்தின் அதிசயம்! வில்லியம் ஷேக்ஸ்பியர் வென்றது எப்படி?’
”ஷேக்ஸ்பியர் எழுதிய பல நாடகங்கள் லண்டனில் உள்ள குளோப் தியேட்டரில் அரங்கேறியது. ஒரு தலைசிறந்த நாடகக் கலைஞராக அவரது புகழை அந்த நாடகங்கள் உறுதிப்படுத்தியது. அவரது படைப்புகள், சோகம், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வகைப்படுத்துவதாக அமைந்து உள்ளது”

வில்லியம் ஷேக்ஸ்பியர்
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஏப்ரல் 1564ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-அவான் நகரில் உள்ள உள்ளூர் தொழிலதிபரான ஜான் ஷேக்ஸ்பியர் மற்றும் ஒரு பணக்கார நில உரிமையாளரின் மகளான மேரி ஆர்டன் ஆகியோருக்குப் பிறந்தார்.
ஷேக்ஸ்பியரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் அவர் உள்ளூர் பள்ளியில் அடிப்படைக் கல்வியைப் பெற்றார்.