தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Watch Video: ‘நீண்ட நேரம் கையேந்திய வைகோ.. லட்டு தராமல் அவமதித்த கார்கே’

Watch Video: ‘நீண்ட நேரம் கையேந்திய வைகோ.. லட்டு தராமல் அவமதித்த கார்கே’

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 07, 2023 11:34 AM IST

வீடியோவில் காட்டியவரை, அங்கிருந்த பெரும்பாலானோருக்கு கார்கே லட்டு வழங்கிவிட்டர், வைகோவை தவிர.

காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் லட்டு கேட்டு நீண்ட நேரம் கையேந்தி நின்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் லட்டு கேட்டு நீண்ட நேரம் கையேந்தி நின்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடித்தீர்த்து வருகின்றனர். செயலகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, I.N.D.I.A கூட்டணி கட்சியினர் ஒன்று கூடி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக தரப்பில் திருச்சி சிவா எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.,ஆகும் மகிழ்ச்சியை அப்போது இனிப்பு வழங்கிய கொண்டாடினர்.

காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம், ஒரு தட்டில் லட்டுகள் கொடுக்கப்பட்டது. முதலில் அவருக்கு ஒரு லட்டு ஊட்டிவிடப்பட்டது. பின்னர், அவர் மற்றவர்களுக்கு லட்டுகளை வழங்கினார். அப்போது அவருக்கு எதிரில் நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனக்கு லட்டு வழங்குமாறு கேட்டு, கார்கேவிடம் கையை நீட்டினார்.

ஆனால், கார்கே அதை அவருக்கு வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். தொடர்ந்து குழந்தைப் போல, வைகோ கையை நீட்டிக் கொண்டிருக்க, அவரைத் தவிர மற்ற அனைவருக்கும் லட்டுகளை வழங்கினார் கார்கே. ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் இறுதி வரை வைகோவுக்கு லட்டு வழங்கப்படவில்லை.

ஆனால், கண்டிப்பாக வைகோவுக்கு லட்டு வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அது கடைசியாக தான் இருந்திருக்கும், காரணம், வீடியோவில் காட்டியவரை, அங்கிருந்த பெரும்பாலானோருக்கு கார்கே லட்டு வழங்கிவிட்டர், வைகோவை தவிர.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் மத்தியில் கம்பீரமான அரசியலுக்கும், கர்ஜனை அரசியலுக்கும் பெயர் போன, வைகோ போன்ற தலைவருக்கு இது போன்ற அவமதிப்பு தற்செயலாக நடந்ததா, அல்லது திட்டமிட்டு நடந்ததா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த வைகோ, சமீபத்தில் கூட எம்.பி., பதவி யார் கொடுத்தது என்கிற சர்ச்சையில் காங்கிரஸ் கட்சியை சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும், கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் என்பதை கடந்து மூத்த அரசியல்வாதி என்கிற முறையிலாவது வைகோவுக்கு முதலில் லட்டு கொடுத்திருக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்