தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Andra Cm Sister Arrest: ஆந்திர முதல்வர் ஜெகமோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா கைது

Andra CM sister arrest: ஆந்திர முதல்வர் ஜெகமோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா கைது

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 29, 2022 07:21 AM IST

தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவருமான ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்ட சகோதரி ஷர்மிளா தெலங்கானாவில் கைது
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்ட சகோதரி ஷர்மிளா தெலங்கானாவில் கைது

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு நகர்வுகளை ஷர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஷர்மிளா பாதயாத்திரை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டை பகுதியில் பேரணி நடத்திய ஷர்மிளா, பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ பெட்டி சுதர்சன் ரெட்டியை விமர்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த பிஆர்எஸ் கட்சியினர் ஷர்மிளாவின் வாகனத்தின்மீது தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் இருகட்சி ஆதரவாளர்களுக்கும், இடையே இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலை கட்டுப்படுத்த அங்கு வந்த போலீஸார், ஷர்மிளாவை கைது செய்து அழைத்து சென்றனர்.

போலீஸார் கைது செய்து அழைத்துச்செல்லும்போது, "என்னை ஏன் கைது செய்ய வேண்டும். நான் குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்டவள். எனது பேருந்தை தாக்கி எரித்தவர்களை கைது செய்வதற்கு பதில் என்னை ஏன் கைது செய்ய வேண்டும். பிஆர்எஸ் கட்சியினர் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ஷர்மிளாவின் 223வது பாதயாத்திரையில் இந்த மோதல் நிகழ்வு ஏற்பட்டுள்ளது. பாதயாத்திரையின்போது பிரஜா பிரஸ்தானம் என்ற வாகனம் ஷர்மிளா ஓய்வு எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த வாகனம் உள்பட ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி பிரமுகர்களின் வாகனங்களும் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

IPL_Entry_Point