தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கர்நாடக தேர்தல்! ஆட்சியை பிடிக்கும் காங்! பீதியில் பாஜக! வெளியான ஷாக் ரிப்போர்ட்

கர்நாடக தேர்தல்! ஆட்சியை பிடிக்கும் காங்! பீதியில் பாஜக! வெளியான ஷாக் ரிப்போர்ட்

Kathiravan V HT Tamil
Mar 11, 2023 11:40 AM IST

இதற்கு முன்னர் இரண்டு முறை பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்து இருந்தாலும் ஒரு முறை கூட ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை பாஜக வென்றது இல்லை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடன் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் பாஜக முதல்வர் பி,எஸ்.எடியூரப்பா மற்றும் எல்.எல்.ஏக்கள்
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடன் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் பாஜக முதல்வர் பி,எஸ்.எடியூரப்பா மற்றும் எல்.எல்.ஏக்கள் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டின் மே மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஹிஜாப் விவகாரம், பெங்களூருவில் உட்கட்டமைப்பு திட்டங்கள் ஒப்பந்தங்களை பெற கமிஷன், மத மற்றும் சாதிய ரீதியிலான மோதல்கள் உள்ளிட்டவை தேர்தல் நேரத்தில் முக்கிய பிரச்னைகளாக எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் காதில் பூவைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் காதில் பூவைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா

ஒரு முறைகூட பெரும்பான்மையை பாஜக பெற்றது இல்லை

தென்னிந்தியாவில் பாஜக நேரடியாக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் நாடு முழுவதும் கர்நாடக தேர்தல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு முறை பாஜக கர்நாடகாவில் ஆட்சி அமைத்து இருந்தாலும் ஒரு முறை கூட ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை பாஜக வென்றது இல்லை.

இந்த நிலையில் எப்படியாவது தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு களப்பணிகளை செய்து வருகிறது. இதற்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியினரும் களத்தில் குதித்து பாஜகவுக்கு டஃப் பைட் கொடுத்து வருகின்றனர்.

கர்நாடகாவின் பிதாரில் விஜய் சங்கல்ப் ரத யாத்திரையைத் தொடங்கும் போது மேளம் அடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா
கர்நாடகாவின் பிதாரில் விஜய் சங்கல்ப் ரத யாத்திரையைத் தொடங்கும் போது மேளம் அடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா (PTI)

டஃப் பைட் கொடுக்கும் காங்கிரஸ்

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் காதில் பூ வைத்துக் கொண்டு பேரவைக்கு செல்வது தொடங்கி, முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவது வரை படு சுறுசுறுப்பாக அரசியல் செய்து வருகிறது காங்கிரஸ்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் லோக் போல் என்ற அமைப்பு வெளியிடுள்ள கருத்துக்கணிப்பில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 45 ஆயிரம் பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது.

பாஜக 77- 83

காங்கிரஸ் 116 122

மதசார்பற்ற ஜனதா தளம் 21 - 27

மற்றவை - 4

தொகுதிகள் வரை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களுக்கு கூடுதலாகவே இடங்களை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் (Arunkumar Rao)

கடந்த தேர்தலில் 104 இடங்கள் வரை வென்ற பாஜகவால் இந்த முறை 83 இடங்கள் அல்லது அதற்கும் குறைவான இடங்களையே பெற முடியும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் 80 இடங்களை வென்ற காங்கிரஸ் இந்த முறை 122 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது

IPL_Entry_Point

டாபிக்ஸ்