தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  White Biriyani : வெள்ளை பிரியாணி – புரட்டாசி சைவம் ஸ்பெஷல்! – தம் போடும் டென்னிக்கும் தெரிந்துகொள்ளுங்கள்!

White Biriyani : வெள்ளை பிரியாணி – புரட்டாசி சைவம் ஸ்பெஷல்! – தம் போடும் டென்னிக்கும் தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Oct 03, 2023 01:00 PM IST

White Biriyani : புரட்டாசி மாச சைவ ஸ்பெஷல் பிரியாணி. வெள்ளை பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

White Biriyani : வெள்ளை பிரியாணி – புரட்டாசி சைவம் ஸ்பெஷல்! – தம் போடும் டென்னிக்கும் தெரிந்துகொள்ளுங்கள்!
White Biriyani : வெள்ளை பிரியாணி – புரட்டாசி சைவம் ஸ்பெஷல்! – தம் போடும் டென்னிக்கும் தெரிந்துகொள்ளுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

நெய் - 3 ஸ்பூன்,

எண்ணெய் – 60 எம்எல்

முழு கரம் மசாலா - மராத்தி மொக்கு -2, அன்னாசிப்பூ -2, ஜாதிபத்திரி - 1டீஸ்பூன், கிராம்பு -5, ஏலக்காய் - 3, பிரியாணி இலை - 1, பட்டை - 4 சிறு துண்டு, சோம்பு – 1 ஸ்பூன்)

முந்திரி – 15

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4, (கீறியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்,

மல்லித்தழை, புதினா – கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

(பிரியாணி அரிசி பாஸ்மதி என்றால் 15 நிமிடங்களும், சீரக சம்பா என்றால் 30 நிமிடங்களும் நீரில் ஊற வைக்கவும்)

செய்முறை

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் – நெய் இரண்டையும் சூடாக்கி, பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, சோம்பு, ஜாதி பத்திரி, ஏலக்காய், மராத்தி, அன்னாசி மொக்கு, முந்திரி சேர்த்து வதக்கவேண்டும்.

2 நிமிடங்கள் வதக்கியவுடன், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து மென்மையாக வரும்படி வதக்கவேண்டும்.

பிறகு இதில் இஞ்சி-பூண்டு விழுது, புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கி தேவையான உப்பு சேர்த்து கிளறிவிட்டு, தண்ணீர் சேர்க்க வேண்டும். (ஒரு பங்கு அரிசிக்கு 2பங்கு எனும் அளவில் தண்ணீர் பயன்படுத்த வேண்டும்) தண்ணீர் சேர்த்த பின்னர், அதை நன்றாக கலக்கி பாத்திரத்தை மூடி போட்டு மூடி கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக கொதி வந்த பின்னர், ஊற வைத்த பிரியாணி அரிசியை நீரை வடித்துவிட்டுச் சேர்த்து மீண்டும் கலக்கி மூடி வைக்கவேண்டும்.

இது 15 நிமிடம் வேக வேண்டும். பிறகு மூடியைத் திறந்தால் நீர் வற்றி வெள்ளை பிரியாணி வெந்திருக்கும். அதை ஒருமுறை கிளறிவிட்டு பிரியாணியை 10 நிமிடம் தம்மில் வைக்கவேண்டும்.

தம்மில் வைப்பது எப்படி?

வீட்டிலுள்ள தோசைக்கல்லை (உபயோகம் இல்லாத கல்லாக இருந்தாலும்) மிதமான தீயில் அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதன் மீது பிரியாணியோடு பாத்திரத்தை வைக்கவேண்டும்.

பிரியாணி பாத்திரத்தை தட்டையான மூடியால் இறுக மூடவும். இந்த மூடி மேல் இன்னொரு அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் வெந்நீர் வைத்து அதையும் மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும். இதை 10 நிமிடம் வைத்தால் போதும்.

பிரியாணி நன்கு தம் ஏறியிருக்கும். இப்போது மூடியைத் திறந்தாலே மணம் வீட்டையே அசர அடிக்கும். இதுவே வெள்ளை குஸ்கா! தயிர் பச்சடி, பட்டாணி குருமா, ஜாம், கறிக்குழம்பு எல்லாமே இதற்கு பெஸ்ட் காம்போ ஆகும்.

சைவ குஸ்கா, சைவப் பிரியர்கள் சைவக் குருமா வகைகள், ஜாம், தயிர் பச்சடி போன்றவற்றோடும், அசைவப் பிரியர்கள் அசைவக் குழம்பு வகைகள், சுக்கா, தால்ஸா, தயிர்பச்சடி போன்றவற்றுடன் இதை ருசிக்கலாம்.

இதோடு பன்னீர் சேர்த்து செய்தால் பன்னீர் வெள்ளை குஸ்காவாக இதை ருசிக்கலாம். மஷ்ரூம் க்ரேவி இதற்கு செம காம்போவாகும்.

இதில் தக்காளி தேவையென்றால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். தேங்காய், கசகசா, முந்திரி, பால் சேர்த்து அரைத்தும் இதில் சேர்க்கலாம்.

நன்றி - வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் பிரேம். 

WhatsApp channel