Vadai Mor Kuzhambu : வெயிலுக்கு இதமாக குளுகுளு மோர்க்குழம்பு! பருப்பு வடை சேர்த்து வித்யாசமாக செய்வது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vadai Mor Kuzhambu : வெயிலுக்கு இதமாக குளுகுளு மோர்க்குழம்பு! பருப்பு வடை சேர்த்து வித்யாசமாக செய்வது எப்படி?

Vadai Mor Kuzhambu : வெயிலுக்கு இதமாக குளுகுளு மோர்க்குழம்பு! பருப்பு வடை சேர்த்து வித்யாசமாக செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Apr 26, 2024 08:00 AM IST

Vadai Mor Kuzhambu : வெயிலுக்கு இதமான மோர்குழம்பில் பருப்பு வடை சேர்த்து செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Vadai Mor Kuzhambu : வெயிலுக்கு இதமாக குளுகுளு மோர்க்குழம்பு! பருப்பு வடை சேர்த்து வித்யாசமாக செய்வது எப்படி?
Vadai Mor Kuzhambu : வெயிலுக்கு இதமாக குளுகுளு மோர்க்குழம்பு! பருப்பு வடை சேர்த்து வித்யாசமாக செய்வது எப்படி?

தேங்காய்த் துருவல் – கால் கப்

பச்சை மிளகாய் – 3

சீரகம் – கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 3

பூண்டு பற்கள் – 2

இஞ்சி – சிறிய துண்டு

ஊறவைத்த துவரம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

ஊறவைத்த அரிசி – ஒரு ஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

சின்ன வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித் தழை – கைப்பிடியளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

பருப்பு வடை செய்ய தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – ஒரு கப்

வர மிளகாய் – 4

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – ஒரு ஸ்பூன்

சின்ன வெங்காயம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

பருப்பு வடை செய்முறை

கடலைப்பருப்பை கழுவி 3 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் தண்ணீரை முழுவதும் வடிகட்டிக் கொள்ளவேண்டும்.

மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, மிளகாய் வற்றல் மற்றும் ஊறவைத்த பருப்பை சேர்த்து 3 முறை பல்ஸ் மோடில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த கலவையை அகலமான பாத்திரத்தில் மாற்றி அதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவேண்டும். இப்போது மோர்க்குழம்புக்கு பருப்பு வடைகள் தயார். இதை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

குழம்பு செய்முறை

மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிரை சில நிமிடங்கள் நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் கால் கப் தேங்காய் துருவல், கால் ஸ்பூன் சீரகம், 3 பச்சை மிளகாய், 3 சின்ன வெங்காயம், 2 பூண்டு பற்கள், சிறிய துண்டு இஞ்சி, ஒரு டேபிள் ஸ்பூன் ஊறவைத்த துவரம்பருப்பு, ஒரு ஸ்பூன் ஊறவைத்த அரிசி மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு குழம்பு பாத்திரத்தில் மிக்ஸி ஜாரில் கடைந்த மோர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.

கடாயில், தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் கடுகு உளுந்து, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து சேர்த்து தாளித்து மோர் கலவையில் சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள மோர் கலவையை குறைவான சூட்டில் வைத்து (இடை இடையே ஒரு கரண்டியால் லேசாக கிண்டி விடுங்கள்) ஓரங்களில் இருந்து நுரைத்து பொங்கி வரும்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவேண்டும்.

சில நிமிடங்கள் மூடாமல் அப்படியே வைத்திருக்கவேண்டும். பின் பொரித்த வடையை சேர்த்து கலந்து மூடி வைக்கவும். சுவையான மோர் குழம்பு தயார்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதிலே வடையும் இருப்பதால், இதற்கு தொட்டுக்கொள்ள தனியாக ஒரு சைட் டிஷ் தேவையில்லை அப்பளம், மிளகாய் வத்தல் போன்ற சைட்டிஷ்களுடன் பரிமாறலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.