தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Thalippu Vadagam : ஓராண்டு ஆனாலும் கெடாது! வெயில் காலத்தில் செய்யவேண்டும்! தாளிப்பு வடக ரெசிபி இதோ!

Thalippu Vadagam : ஓராண்டு ஆனாலும் கெடாது! வெயில் காலத்தில் செய்யவேண்டும்! தாளிப்பு வடக ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Apr 19, 2024 02:52 PM IST

Thalippu Vadagam : ஒராண்டு வரை கெடாது. தாளிப்பு வடகம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். வெயில் காலத்தில் செய்து வைத்துக்கொள்வது நல்லது. வெயிலில் காய வைக்க வேண்டும்.

Thalippu Vadagam : ஓராண்டு ஆனாலும் கெடாது! வெயில் காலத்தில் செய்யவேண்டும்! தாளிப்பு வடக ரெசிபி இதோ!
Thalippu Vadagam : ஓராண்டு ஆனாலும் கெடாது! வெயில் காலத்தில் செய்யவேண்டும்! தாளிப்பு வடக ரெசிபி இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

(சின்ன வெங்காயத்தை முதலில் தோல் நீக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதை ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒன்றிரண்டாக இரண்டு முறை மட்டுமே ஓட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். மையாக அரைக்கக் கூடாது. அரைத்தால் வடகம் நன்றாக இருக்காது. இதை பொடியாக நறுக்கியும் செய்யலாம். முழு வெங்காயமாக சேர்த்தே ஓட்டி எடுக்க வேண்டும். இடித்ததுபோல் திப்பிதிப்பியாக இருக்கவேண்டும்)

மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்

கல் உப்பு – 2 ஸ்பூன்

இந்த மூன்றையும் சேர்த்து பெரிய தட்டில் பரவலாக தூவி நல்ல மொட்டை மாடி வெயிலில் காய வைக்க வேண்டும். ஒரு நாள் காய வைத்து, மாலையில் எடுத்து வீட்டுக்குள் ஃபேன் காற்றில் வைத்து உலர்த்த வேண்டும்.

இரவில் இதனுடன் மற்ற பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தில் உள்ள ஈரப்பதம் அனைத்தும் வற்றியிருக்கும்.

பூண்டு – 100 கிராம்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

சோம்பு – 2 ஸ்பூன்

வெந்தயம் – 2 ஸ்பூன்

கடுகு – 50 கிராம் (சின்ன கடுகு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்)

சீரகம் – 50 கிராம்

உளுந்து – 50 கிராம் (கருப்பு உளுந்து உடைத்தது)

பெருங்காயம் – ஒரு ஸ்பூன்

விளக்கெண்ணெய் – 50 கிராம்

செய்முறை

ஏற்கனவே சில பொருட்கள் சேர்த்து உலர்த்தி வைத்துள்ள வெங்காயத்தில், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, வெந்தயம், சோம்பு, கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், விளக்கெண்ணெய் என அனைத்தையும் சேர்த்து கைகளால் நன்றாக பிசைய வேண்டும்.

இதுபோல் பிசையும்போதே வடகத்தின் வாசம் நன்றாக இருக்கும். இதனுடன் கடலை எண்ணெய் 2 ஸ்பூன் சேர்க்கவேண்டும். நல்லெண்ணெய் சேர்க்கத் தேவையில்லை. நல்லெண்ணெய் சேர்த்தால் வடகம் கருப்பாகிவிடும்.

எப்போதுமே ஒரு வருடம் வரை வடகத்தை வைத்திருக்கும்போது, அது கருப்பு நிறத்தில் மாறிவிடும். இரவு, அனைத்தையும் ஒன்று கூட்டி, கெட்டியாக்கி, மூடிபோட்டு மூடி வைத்துவிடவேண்டும். அனைத்து பொருட்களும் ஒன்று சேர்ந்து ஊறி வரவேண்டும். இதை மூடி வைத்துவிடவேண்டும்.

அடுத்த நாள் காலையில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக மீண்டும் பிசைந்து, கையில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.

இதை காலையிலே செய்து உருண்டைகளை வெயிலில் காய வைக்க வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள எண்ணெய், மஞ்சள், உப்பு உள்ளிட்டவை பொருட்களை கெட்டுப்போகவிடாமல் பார்த்துக்கொள்ளும். இரண்டாம் நாள் அதேபோல் உருண்டைகளாக மூடி வைத்துவிடவேண்டும்.

பின்னர், மூன்றாவது நாள், மீண்டும் கையில் எண்ணெய் தடவி உருண்டைகளாகவே பிடித்து மீண்டும் நல்ல வெயிலில் காயவைக்க வேண்டும். மேலும் இரண்டு நாட்கள் எண்ணெய் தொட்டு பிடித்து வைக்க வேண்டும்.

பின்னர் 10 நாட்கள் பிடிக்காமல் காய வைக்க வேண்டும். அப்படி செய்யும்போது, ருசியான தாளிப்பு வடகம் தயார். வெயிலில் உலர்த்துவதாலே இதன் உட்பொருட்கள் அணைத்தும் மொறு மொறு பதத்துக்கு வரவேண்டும்.

அந்தப்பதம் வந்தவுடன் இதை எடுத்து தனியாக காய்ந்த பாத்திரம் அல்லது பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால், நீங்கள் ஓராண்டு வரை வைத்துக்கொள்ளலாம். ஒரு உருண்டை ஒரு மாதம் வரை வரும். அனைத்து சைவ குழம்புகளிலும் சேர்க்கலாம்.

எனவே 12 முதல் 15 உருண்டைகள் பிடித்து வைத்துக்கொண்டால் போதும். ஓராண்டு உங்களுக்கு கவலையில்லை. சாம்பார், ரசம், குழம்பு வகைகள் அனைத்துக்கும் தனி மணம் மற்றும் சுவையைத்தரும்.

WhatsApp channel

டாபிக்ஸ்