Eye Care: 40 வயதை அடைந்துவிட்டால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்..! தடுக்க வழிகள் என்ன?
மங்கலான பார்வை, கண் இமைகளில் ஒவ்வாமை, பார்வை நரம்பில் பாதிப்பை ஏற்படுத்தும் கிளொகோமா முதல் கண்கள் வறட்சி வரை பல்வேறு விதமான பிரச்னைகளும், பாதிப்புகள் நாற்பது வயதை அடைந்த பின்னர் உண்டாகிறது.
கண் சார்ந்த பொதுவான பிரச்னைகள் பலருக்கும் தொந்தரவு தரும் விஷயமாகவே உள்ளது. கண்கள் சிவந்து போகுதல், கண்களுக்கு கொடுக்கப்படும் அதிக அழுத்தங்கள், கேட்ஜெட்கள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது, கண்களுக்கு உரிய பராமரிப்பு தராமல் இருப்பது, கண்களை சுத்தப்படுத்தாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மங்கலான பார்வை ஏற்படுகிறது. மேலும் கண் சார்ந்த பலவிதமான பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
வயது ஏறும்போது கண்பார்வை மீது தனியொரு கவனத்தை செலுத்த தவறும்பட்சத்தில், மங்கலான பார்வை, கண் இமைகளில் ஒவ்வாமை, க்ளுகோமா, கண்களில் வறட்சி போன்றவை ஏற்படலாம். குறிப்பாக 40 வயதுக்கு உடல் உறுப்புகளில் சில பிரச்னைகள் ஏற்படுவது போல் கண்களிலும் சில சிக்கலும், இன்னல்களும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த சூழ்நிலை ஏற்படாலும் தடுக்க கண்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவது மிக மிக அவசியம்.
அவ்வப்போது மருத்துவரை அணுகி கண்களில் பரிசோதனை செய்துகொள்வதுடன், மருத்துவரின் ஆலோசனைப்படி கண்களை பராமரிக்க வேண்டும். கண்கள் தொடர்பான பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.
40 வயதை கடந்த பிறகு கண்களில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள் குறித்து கண் மருத்துவ நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.
புற பார்வை இழப்பு
உங்கள் கண்களில் இரு புறங்களிலும் இருக்கும் பார்வையை மெல்ல இழக்க நேரிடும். இரண்டு புறங்களிலும் என்ன நிகழ்கிறது என்பதை பார்க்க முடியாமல் போனால் கிளொகோமா பாதிப்பு உண்டாவதற்கான தொடக்க அறிகுறி என்பதை புரிந்துகொள்ளவும். இவை கண்களுக்குள் இருக்கும் அதிக அழுத்தம் காரணமாக நிகழ்கிறது.
மங்கலான பார்வை
உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாசிப்பதிலோ அல்லது டிவி பார்ப்பதிலோ சிரமம் ஏற்படுகிறதா? உங்களுக்கு கண்புரை இருக்கலாம். இந்த பிரச்னை ஏற்பட்டால் கண்களில் லென்சில் ஒளி புகுவது முடியாமல் மங்கலான பார்வை ஏற்படலாம். வயது ஏறினால் இந்த பாதிப்பும் அதிகமாகும்.
சிதைவு பார்வை
கண்களில் ரெட்டினா பகுதியில் ஏற்படும் சிதைவு காரணமாக இவ்வாறு நிகழ்கிறது. இதனை மாகுலர் சிதைவு என்று அழைக்கிறார்கள். வயது மூப்பு காரணமாக நிகழும் இந்தப் பாதிப்பு குறித்து தொடக்கத்தில் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் இவை மெல்ல மெல்ல பார்வை குறைபாட்டை உண்டாக்குகிறது. எனவே பார்வை பரிபோகும் முன்னரே இந்தப் பிரச்னையை சரிசெய்து கொள்ள வேண்டும்.
டயபிடில் ரெட்டினோபதி
உங்களுக்கு டைப் 1 அல்லது டைப் 2 நீரழிவு பாதிப்பு இருந்தால் உங்களுக்கு கண்களை வருடத்துக்கு ஒரு முறை டயபிடிக் ரொட்டினோ பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக ரத்த சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம் சிறிய ரத்த நாளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், கண்களின் ரெட்டினாவிலும் பாதிப்பை உண்டாக்குகிறது.
கண் இமைகளில் ஒவ்வாமை
கண்கள் சிவப்பாகுதள், நீர் வழிதல், அரிப்பு ஏற்படுதல் இருந்தால் இமைகளில் ஒவ்வாமை உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். உடனடியாக கண் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைகளை பெற வேண்டும்.
பிரஸ்பியோபியா
இந்த நிலையை தூரப்பார்வை என்று அழைக்கிறார்கல். நாற்பது வயது ஆன பிறகு பலருக்கும் நிகழும் பார்வை மாற்றம்தான் இவை. உங்களுக்கு வாசிப்பதில் பிரச்னை ஏதும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கேற்ற ஆலோசனை பெற வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்