தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kandi Pachadi : ஆந்திரா ஸ்பெஷல் கண்டி சட்னி! துவரம் பருப்பு துவையல்! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!

Kandi Pachadi : ஆந்திரா ஸ்பெஷல் கண்டி சட்னி! துவரம் பருப்பு துவையல்! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!

Priyadarshini R HT Tamil
Mar 27, 2024 11:18 AM IST

Kandi Pachadi : ஆந்திரா ஸ்பெஷல் கண்டி சட்னி, துவரம் பருப்பு துவையல் செய்வது எப்படி?

Kandi Pachadi : ஆந்திரா ஸ்பெஷல் கண்டி சட்னி! துவரம் பருப்பு துவையல்! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது!
Kandi Pachadi : ஆந்திரா ஸ்பெஷல் கண்டி சட்னி! துவரம் பருப்பு துவையல்! சாதம், டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது! (paddhus kitchen)

ட்ரெண்டிங் செய்திகள்

மிளகாய் - 8

பூண்டு - 5 பற்கள்

சீரகம் – ஒன்றரை ஸ்பூன்

புளி – ஒரு சிறிய துண்டு

கல் உப்பு – தேவையான அளவு

மஞ்சள்தூள் – ஒரு ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 3 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

மிளகாய் – 2

பூண்டு - 4 பற்கள்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காய தூள் – சிறிதளவு

(கட்டிப்பெருங்காயம் எடுத்தால், இதை சிறிது எண்ணெய்விட்டு வறுத்து, பொடித்துக்கொள்ளவேண்டும்)

நெய் – தேவையான அளவு

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பரவலாக செய்யப்படுவது இந்த கண்டி பச்சடி. இது ஒரு வகை சட்னியாகும். இது சுவை நிறைந்ததாக இருக்கும். இதில் துவரம் பருப்பின் சுவை அதிகமாக இருக்கும். இதை சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதில் காய்கறிகள் எதுவும் சேர்க்க தேவையில்லை. உங்கள் வீட்டில் காய்கறி இல்லையென்றாலும், சட்டுன்னு இந்த சட்டினியை செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். இதற்கு வெங்காயம் கூட தேவையில்லை. இந்த சட்னியையே சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

ரசம் மற்றும் மோர் சாதத்துக்கு தொட்டுககொண்டும் சாப்பிடலாம். எனவே காய் தீர்ந்துவிட்டால் கவலையில்லை. இந்த துவையலை செய்துவிட்டு, இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் மட்டும் பொரித்துவிட்டால் போதும் அந்த நாளை ஓட்டிவிடலாம்.

இதை செய்வது எளிது, பருப்பு மற்றும் மற்ற பொருட்களை வறுத்து ஆறவைத்து அரைத்துக்கொண்டாலே போதும். கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக்கொண்டு, அதை தாளிக்க வேண்டியதுதான். புதிதாக சமைப்பவர்கள் கூட எளிதாக செய்துவிட முடியும். இதை 10 நிமிடத்தில் செய்துவிட முடியும். எனவே அவசர காலத்தில் செய்து மகிழுங்கள்.

செய்முறை

முதலில் துவரம் பருப்பை கடாயில் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும். பருப்பும் நன்றாக சிவந்து வரவேண்டும். கருகிவிடாமல் அடுப்பை குறைவான தீயில் வைத்து நேரம் எடுத்து பொறுமையாக வறுக்க வேண்டும். பருப்பு வறுப்ட்டால்தான் துவையல் சுவையாக இருக்கும்.

பருப்பு வறுபட்டவுடன், இதில் சீரகம், மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். புளி சேர்ப்பதால் துவையல் புளிப்பு சுவையுடன் நன்றாக இருக்கும்.

அனைத்து பொருட்களும் நன்றாக வறுபட்டவுடன், இதை ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் அப்படியே சேர்த்து அரைக்க வேண்டும். முதலில் தண்ணீர் ஊற்றாமலும், பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். காரமாக வேண்டுமென்றால், அதிக மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம். கொரகொரப்பாக, கெட்டியாக துவையல் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகம், தட்டிய பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். அதை துவையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

துவரம் பருப்பு துவையல் ரெடி. இதை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட சுவை அள்ளும். இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என டிஃபனுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம். ஆனால் டிஃபனைவிட சாதத்துக்குத்தான் நல்லது.

நன்றி – ஹேமா சுப்ரமணியன்.

WhatsApp channel

டாபிக்ஸ்