தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Rasam : இந்த ஒரு ரசம் போதும்! உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்! முடி வளர்வது உறுதியாகும்! பல நன்மைகளும் உண்டு!

Amla Rasam : இந்த ஒரு ரசம் போதும்! உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்! முடி வளர்வது உறுதியாகும்! பல நன்மைகளும் உண்டு!

Priyadarshini R HT Tamil
Mar 18, 2024 05:30 PM IST

Amla Rasam : நெல்லிக்காய் ரசம் செய்வது எப்படி?

Amla Rasam : இந்த ஒரு ரசம் போதும்! உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்! முடி வளர்வது உறுதியாகும்! பல நன்மைகளும் உண்டு!
Amla Rasam : இந்த ஒரு ரசம் போதும்! உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்! முடி வளர்வது உறுதியாகும்! பல நன்மைகளும் உண்டு!

ட்ரெண்டிங் செய்திகள்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

பூண்டு – 10 பல்

வர மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பெருங்காயம் – சிறிய உருண்டை

(இவையனைத்தையும் கடாயில் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். ஆறவிடவேண்டும்)

புளி – எலுமிச்சை அளவு (சுடு தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ள வேண்டும்)

நெல்லிக்காய் – 2 (விதைகளை நீக்கி விட்டு, நறுக்கிக்கொள்ள வேண்டும்)

தக்காளி – 3

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – உளுந்து

கறிவேப்பிலை – ஒரு கொத்து

காய்ந்த மிளகாய் – 2

உப்பு -தேவையான அளவு

மல்லித்தழை – கைப்பிடியளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

வறுத்த மசாலாக்களுடன், நறுக்கிய நெல்லிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்க வேண்டும். அதில் கடுகு, உளுந்து தாளித்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்க்க வேண்டும்.

பின்னர் அரைத்த விழுதை சேர்த்து வதக்க வேண்டும். அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்க வேண்டும்.

அடுத்து கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து, நுரை தட்டு வரும் கொதிக்க வைக்க வேண்டும்.

நுரை வந்ததும் கைப்பிடியளவு மல்லித்தழையை சேர்த்து மூடி வைக்க வேண்டும்.

பின்னர், சிறிது நேரம் கழித்து இறக்கினால் மணமணக்கும் நெல்லிக்காய் ரசம் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.

நெல்லிக்காயில் அதிக சத்துக்கள் உள்ளன. அதை நாம் எதாவது ஒரு வடிவில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த ரசத்தை வைத்துக்கொடுத்து சாப்பாடு கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அவர்களுக்கு காய்ச்சல் விரைவில் குணமாகும்.

நெல்லிக்காயின் நன்மைகள்

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இதனால் செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி குறைகிறது.

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவது, உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், குறைக்கவும் உதவுகிறது.

நெல்லிக்காய், உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனால் இதய நோய்கள் வரும் ஆபத்து குறைகிறது. இதற்கு இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் காரணமாகின்றன.

உங்கள் உடலில் கழிவுகளை நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. 

WhatsApp channel

டாபிக்ஸ்