தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Weight Loss Pills: எடை குறைய மாத்திரை சாப்பிடுறீங்களா?.. அப்போ நீங்க கவனமா இருக்கணும்

Weight loss Pills: எடை குறைய மாத்திரை சாப்பிடுறீங்களா?.. அப்போ நீங்க கவனமா இருக்கணும்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 28, 2024 11:22 AM IST

உடல் எடை குறைப்புக்காக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இங்கே காண்போம்.

உடல் எடை குறைப்பு
உடல் எடை குறைப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அதேபோல ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்கத்தை மேற்கொள்கின்ற காரணத்தினால் உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. சரியான முறையில் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சரியான வழிமுறையை இன்று இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர் ஓரிரு நாட்கள் கடைபிடித்து விட்டு அதற்குப் பிறகு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதன் காரணமாக சந்தையில் விற்கப்படும் மாத்திரைகளை பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர்.

உடல் எடையை குறைப்பதற்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளால் வாழ்வியலில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாக்குகின்றன. உடல் எடை குறைப்பதற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

உடல் எடை குறைப்பதற்காக விற்கப்படும் மாத்திரைகளால் பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது. நமது உடலுக்கு எந்த அளவிற்கு இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் செரிமான கோளாறுகள் மற்றும் இதய கோளாறுகள் உள்ளிட்டவைகள் உண்டாகின்றன.

உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் மாத்திரை எடுத்துக் கொள்ளும்போது மருத்துவரை அணுகி அவர்களுடைய ஆலோசனை பெற்று அதற்கு பிறகு உடல் எடை குறைப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாதிப்புகள்

 

உடல் எடையை குறைப்பதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் இதே கோளாறுகள் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலையில் உண்டாகின்றன. மேலும் வயிற்று சிக்கல்கள், செரிமான கோளாறுகள், உடல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உள்ளிட்டவைகள் ஏற்படுவதாக கூறப்படுகின்றன.

இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் பொழுது மன அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மனநலன் பாதிக்கப்பட்டால் தூக்கமின்மை கவலைகள் உள்ளிட்டவர்கள் ஏற்படும். அதேசமயம் கல்லீரல் பாதிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.

இயல்பாகவே நமது உடலில் ஊட்டச்சத்துக்களை ஈர்க்கும் திறன் உள்ளது. இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்தும் போது அந்த வேலைகள் நிறுத்தப்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமல்லாமல் கட்டுக்கடங்காமல் உடல் எடை குறைப்பு மாத்திரைகளின் எண்ணிக்கை சந்தையில் அதிகரித்து வருகின்றன உங்கள் உடலை மருத்துவரிடம் சரியாகப் பரிசோதனை செய்துவிட்டு அதற்கு எது தேவையோ அந்த பரிந்துரையில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மனிதனின் உடலுக்கு சரியான தூக்கவும், சரியான உடற்பயிற்சியும் மட்டுமே சரியான தீர்வாக இருக்கும். குறுகிய காலத்தில் நாம் நினைத்ததை நடத்துவதற்காக இதுபோன்ற காரியங்களில் இறங்கி விட்டால் பின்வரும் நாட்களில் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதற்குப் பிறகு கட்டுப்படுத்த முடியாத சில சிக்கல்கள் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.