Massage Benefits: பிறப்புறுப்பில் நல்லெண்ணெய் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்.. தூக்கம் முதல் நரம்பு மண்டல அமைதி வரை!
Massage Benefits: வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு பிறப்புறுப்புகளை மசாஜ் செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நன்றாக தூங்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சுய பாதுகாப்பு, உடலுக்கு போதுமான ஓய்வை தரும்.

Massage Benefits: உடல் நலத்தைப் பேணும்போது தூக்கம் அவசியம். நல்ல ஆழ்ந்த உறக்கம் இல்லாததால் அடிக்கடி பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை மரணத்திற்கு சமம் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு வகையான பிரச்சனைகளால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. தூக்கமின்மையும் கூட ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.
தூக்கமின்மைக்கான காரணங்கள்
இன்றைய காலத்தில் தூக்கமின்மைக்கு முக்கிய காரணங்களாக மொபைல் போன்கள் முக்கிய காரணமாக மாறி உள்ளது. இளைஞர்கள் நள்ளிரவு தாண்டி செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இதனால் தூக்கம் கடுமையாக பாதிக்கப்படுவதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் வயதானவர்களை பொறுத்தவரை உடல் உபாதைகள், இரவில் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்.
3 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் குறைந்தது 10 முதல் 13 மணிநேரம் தூங்க வேண்டும். 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள்கு குறைந்தது 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும். 13 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும்.
