Importance of yoga: மன அழுத்தம் முதல் தூக்கம் வரை.. தினம் தினம் யோகா.. ஏன் அவசியம்? - காரணங்கள் இங்கே-what is the importance of yoga in our daily life - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Importance Of Yoga: மன அழுத்தம் முதல் தூக்கம் வரை.. தினம் தினம் யோகா.. ஏன் அவசியம்? - காரணங்கள் இங்கே

Importance of yoga: மன அழுத்தம் முதல் தூக்கம் வரை.. தினம் தினம் யோகா.. ஏன் அவசியம்? - காரணங்கள் இங்கே

Kalyani Pandiyan S HT Tamil
Mar 19, 2024 08:42 PM IST

யோகா உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கும். இது உங்களது உடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்களையும், அன்றாட வேலைகளின் போது ஏற்படும் காயங்களையும் தவிர்க்க உதவும்.யோகா உங்களது முழு உடலில் உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது.

யோகா செய்வதின் முக்கியம்!
யோகா செய்வதின் முக்கியம்!

யோகா உங்களது மன அழுத்ததை குறைக்கும். அதுமட்டுமில்லாமல் மனதளவில் ஒரு விதமான தெளிவை கொடுக்கும்.

யோகா உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை கொடுக்கும். இது உங்களது உடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்களையும், அன்றாட வேலைகளின் போது ஏற்படும் காயங்களையும் தவிர்க்க உதவும்.

யோகா உங்களது முழு உடலில் உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது.

யோகா ஒருங்கிணைப்பு, நிலை தன்மை, சமநிலை உள்ளிட்டவற்றில் வேலை செய்கிறது. இதனால் அதிக கவனம் தேவைப்படும் செயல்களில், நாம் இடையூறு இல்லாமல் ஈடுபட யோகா உதவும். 

உங்களது உடலில் இருக்கும் முதுகுத்தண்டின் சீரான அமைப்பை கொண்டு வர யோகா உதவுகிறது. மேலும் உடலுக்கு சரியான சீரமைப்பையும் கொடுக்கிறது. இது கழுத்து, தோள்கள் மற்றும் முதுகு ஆகியவற்றில் உள்ள அசெளகரியத்தை போக்க உதவுகிறது. அவை சரியான நிலையில் இல்லாமல் இருக்கும் போது வரும் வலியையும் நீக்குகிறது. 

உடலை ரிலாக்ஸாக வைக்க யோகாவில் பயன்படுத்தப்படும் ஆழமான சுவாசம், தியானம் உள்ளிட்டவை நமது உடலின் பாராசிம்பாத்தடிக் நரம்பு மண்டலத்தை ஆக்டிவேட் செய்கிறது. இதன் வழியாக, வேலை பளு காரணமாக உடலில் ஏற்படும் அழுத்தம் குறைக்கப்படுகிறது.

தியானம் செய்வது நமது மனதிற்கு தெளிவு, கூர்மையான கவனம், ஒருமுகப்படுத்தும் தன்மை உள்ளிட்டவற்றை கொடுக்கிறது. இது அன்றைய தினத்தின் தினசரி வேலைகள் மற்றும் செயல்களை திறம்பட செய்ய வழிவகுக்கிறது.

யோகா செய்வதால் கிடைக்கும் ரிலாக்ஸ் மற்றும் அழுத்தம் குறைதல், தூக்கமின்மை சார்ந்த பிரச்சினைகளை குறைத்து, நமது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

தினசரி யோகாவை நாம் செய்யும் போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் குறைக்கப்படுவதால், நோய் எதிர்ப்பு செயல்பாடு மேம்படுகிறது. 

உடலில் இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகள் தூண்டப்படுவதால் நோய் மற்றும் தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பு  கிடைக்கிறது. 

சவால்களை கையாளுதல், எதிர்த்து போராடுதல், ஏற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட எமோஷனலான பகுதிகளை வலுப்படுத்துகிறது. இதனால் வாழ்க்கையை பாசிட்டிவான பாதையில் பார்க்க முடியும்.

கொய்யா இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை இங்கு பார்க்கலாம். 

 

செரிமானத்துக்கு உதவுகிறது

கொய்யா இலைகளில் ஆன்டி-பாக்டீரியல் உட்பொருட்கள் உள்ளது. இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் செரிமானத்துக்கு உதவுகிறது. கொய்யா இலைகள் நல்ல மலமிலக்கியாக செயல்படுகிறது. மலத்தை இலக்கி மலச்சிக்கலை போக்குகிறது. இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகள் அல்லது நோய் வரும் ஆபத்து உள்ளவர்களுக்கு கொய்யா இலைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நிலைப்படுத்துகிறது. சாப்பிட்ட பின் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதை தடுக்கிறது.

எனவே நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் பராமரிக்க இந்த கொய்யா இலையில் தேநீர் செய்து பருகலாம். மேலும் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பூஸ்ட் செய்கிறது

கொய்ய இலைகளில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆகிஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்து உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

உங்கள் உடலின் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதன் மூலம், நோய்கள் மற்றும் தொற்றுகள் என உங்கள் உடல் அனைத்தையும் எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது

கொய்யா இலைகளில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ராடிக்கல்களை சமப்படுத்துகிறது. இது செல்களின் சேதத்தை குறைக்கிறது.

இதனால் புற்றுநோய் கட்டிகள் வளர்வது தடுக்கப்படுகிறது. கொய்யா இலைகளை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டால், அது சில புற்றுநோய்களுக்கு எதிரான பாதுகாப்பை உறுதியாக வழங்குகிறது.

இதய ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது

கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, கொய்யா இலைகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்கள் உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இது இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

கண்பார்வை குறைபாட்டை சரிசெய்கிறது

கொய்யா இலைகளில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள், கண் பார்வைக்கு நல்லது. இந்த இலைகளை சாப்பிடுவது கண் பார்வையை கூராக்கும். கண் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது

கொய்யா இலையில் மனஅழுத்தத்தை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. இதனால் பதற்றம் குறைந்து, ஒட்டுமொத்த மனநலனும் மேம்படுகிறது. அவை உங்களின் மன அமைதிக்கு வழிவகுக்கிறது. மனஅழுத்தம் ஏற்படும்போது கொய்யா இலைகள் உங்களை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.

உடல் எடை இழப்புக்கு சிறந்தது

கொய்யா இலைகள் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.இதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இது கலோரிகளை குறைக்க உதவுகிறது. எடைக்குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் தங்கள் உணவில் கொய்ய இலைகளை சேர்த்தால் உங்களக்கு நன்மைகள் கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது

கொய்யா இலைகள் மாதவிடாய் வலிகளை குறைக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்குகிறது. இதில் உள்ள குணங்கள் வலிகளை போக்கும். மாதவிடாயை மகிழ்ச்சியானதாக மாற்றும்.

சருமம் மற்றும் தலைமுடிக்கு நல்லது

கொய்யா இலைகளில் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைய உள்ளது. இது சரும நோய்கள் மற்றும் முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இது உங்கள் சருமத்தை இறுக்கமாக்கச் செய்கிறது. இதனால் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த இலைகள் தலைமுடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த கொய்யா இலைகளை உங்கள் உணவில் சேர்த்தால், உங்கள் உடல் இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறும். இந்த இலைகள் கிடைக்கவில்லையென்றால், கொய்யா பழம் விற்பவர்களிடம் இருந்து கூட பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.