Poondu Kara Podi : செரிமானத்துக்கு உதவும், சுவையும் அள்ளும், இந்தப்பொடிய செஞ்சு பாருங்க!
Poondu Kara Podi : செரிமானத்துக்கு உதவும், சுவையும் அள்ளும், இந்தப்பொடிய செஞ்சு பாருங்க.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
வரமல்லி – 3 ஸ்பூன்
உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
வர மிளகாய் – 10
புளி – சிறிதளவு
பூண்டு – 10
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வரமல்லி, மிளகாயை கடாயில் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, புளி உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்தையும் சேர்த்து ஒருமுறை வறுத்து எடுத்து வைத்துவிடவேண்டும்.
குறைவான தீயில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும். வறுக்கும்போது தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அடிபிடிக்காமல் வரும்.
பின்னர் அனைத்தும் நன்றாக ஆறியவுடன், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக பொடித்துக்கொள்ள வேண்டும் அல்லது எண்ணெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பேஸ்ட்டாகவும் அரைத்துக்கொள்ளலாம்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து, சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
புளிப்பு, காரம், உப்பு என அனைத்து அரைந்து ஒரு தரமான நல்ல சுவையில் இருக்கும் இந்த பூண்டு காரம் பொடி.
பூண்டு ரசத்தை அப்படியே அரைத்து சாப்பிடுவது போன்றதொரு சுவையை தரும். இதில் சேர்த்துள்ள அனைத்துமே செரிமானத்துக்கு உதவும் என்பதால், இந்த சாதம் சாப்பிட்டவுடனே செரித்துவிடும். ஒருமுறை இதுபோல் செய்து சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிட தூண்டும்.
வழக்கமான சாம்பார், ரசம் அல்லது தயிர் சாததத்துக்கு பதில், இந்தப்பொடியை நீங்கள் செய்து சாப்பிட்டீர்கள் என்றால் சுவை அள்ளும். வித்யாசமாகவும் இருக்கும். சாதத்துடன் மட்டுமல்ல இதை சேவை அல்லது இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்