கோடை கால சீசன் பழமாக இருந்து வரும் மாம்பழம், மாங்காய் பல நன்மைகளை கொண்டிருக்கிறது. மா மரத்தின் இலைகளிலும் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன

By Muthu Vinayagam Kosalairaman
Mar 23, 2024

Hindustan Times
Tamil

இனிப்பும், புளிப்பும் சுவை கொண்டதாக இருக்கும் மாங்காய் போல் அந்த மரத்தின் இலைகளும் சாப்பிடக்கூடிய ஆரோக்கியம் மிக்க உணவு பொருளாகவே உள்ளது

மாங்காய் இலை வைத்து டீ தயார் செய்து பருகலாம். அதை பவுடராக அல்லது அதன் இலைகளை வைத்தே டீ தயார் செய்யலாம். ஆனால் இதை செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்

எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது முதல் மாங்காயில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

மா இலையில் இருக்கும் டெர்பினாய்ட்கள், பாலிபினால்கள் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுதை தடுக்கும் தன்மை கொண்டுள்ளது

மா இலையில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது 

மா இலை சாறு கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் எடை பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது

உடலில் உள்ள ட்ரைகிளசரைட்ஸ் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பகன் மூலம் டயபிடிஸ் பாதிப்பை நிர்வகிக்கிறது

மா இலைகளில் இருக்கும் மாங்கிஃபெரின் ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சிகளுக்கு எதிராக போராடி புற்று நோய் பாதிப்பின் அபாயத்தை குறைப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது

இதில் இருக்கும் அதிகஅளவிலான ஆன்டிஆக்சிடன்ட்கள் தலைமுடி மயிர்கால்கள் சேதமடைவதை தடுக்கிறது 

சியா விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்