தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Thokku : இத செஞ்சுட்டு நிம்மதியா இருங்க! ஒரு மாதம் கெடாது! சாதம், டிபஃனுக்கும் பக்காவான சைட் டிஷ்!

Amla Thokku : இத செஞ்சுட்டு நிம்மதியா இருங்க! ஒரு மாதம் கெடாது! சாதம், டிபஃனுக்கும் பக்காவான சைட் டிஷ்!

Priyadarshini R HT Tamil
Apr 20, 2024 09:00 AM IST

Amla Thokku : இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். பழச்சாறு, ஊறுகாய், துவையல், சாதம், லேகியம், ரசம், தேநீர் என பல்வேறு வகையாக நாம் இந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.

Amla Thokku : இத செஞ்சுட்டு நிம்மதியா இருங்க! ஒரு மாதம் கெடாது! சாதம், டிபஃனுக்கும் பக்காவான சைட் டிஷ்!
Amla Thokku : இத செஞ்சுட்டு நிம்மதியா இருங்க! ஒரு மாதம் கெடாது! சாதம், டிபஃனுக்கும் பக்காவான சைட் டிஷ்!

ட்ரெண்டிங் செய்திகள்

கடுகு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

வர மல்லி – அரை ஸ்பூன்

(இது மூன்றையும் கடாயில் தனியாக வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும்)

புளி – ஒரு எலுமிச்சை அளவு (ஊறவைத்து கெட்டியாக கரைத்துக்கொள்ளவேண்டும்)

நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

பூண்டு – 15 பல்

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை

நெல்லிக்காய் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை ஆறவிட்டு நெல்லிக்காய்களில் விதைகளை நீக்கிவிட்டு, வேகவைத்த தண்ணீரையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயை சூடாக்கி அதில் கடுகு தாளித்து, பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், உப்பு, கெட்டியாக கரைத்த புளி சேர்த்து நன்றாக கலந்து வதக்கவேண்டும்.

பின்னர் மிளகாய்த்தூள், அரைத்து வைத்த கடுகு, வெந்தயப்பொடி சேர்த்து கலந்துவிடவேண்டும்.

அனைத்தையும் மூடிவைத்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். பின்னர், எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் அடுப்பை அணைக்கவேண்டும்.

சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார்.

இதை அனைத்து கலவை சாததுக்கும் சைட் டிஷ்ஷாகவும், அனைத்து டிஃபனுக்கும் சைட்டிஷ்ஷாகவும் வைத்துக்கொள்ளலாம்.

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்

வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த வயோதிகத்தை தடுக்கும். நெல்லிக்காய் பரவலாக எங்கும் உள்ளது. எனவே அனைவரும் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. அதிகளவு கிடைக்கும் காலங்களில் இதுபோல் செய்து நீண்ட நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.

இதன் துவர்ப்பு சுவையால் இதை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே நெல்லிச்சாறு, நெல்லி தேநீர் என செய்து அசத்தலாம். இதில் லேகியம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

நெல்லிக்காயின் நன்மைகள்

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது

நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.

இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது. நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடும்போது துவர்ப்பு சுவையாக இருக்கும். அதறக்காக அதிலிருந்து பல்வேறு உணவுகளும் செய்யப்படுகின்றன.

அல்சரை குணப்படுத்துகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். பழச்சாறு, ஊறுகாய், துவையல், சாதம், லேகியம், ரசம், தேநீர் என பல்வேறு வகையாக நாம் இந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.

நெல்லிக்கனியை தினமும் எடுப்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு வருவதில்லையென்றும், அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. எனவே உங்கள் உணவில் கட்டாயம் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்