தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Pickle : சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய்! நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்!

Amla Pickle : சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுவையில் நெல்லிக்காய் ஊறுகாய்! நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil
Mar 27, 2024 11:55 AM IST

Amla Pickle : இதை அனைத்து வெரைட்டி சாதங்களுடனும் தொட்டுக்கொள்ளலாம். இதை தோசை அல்லது பராத்தா மற்றும் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Amla Pickle : சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுலையில் நெல்லிக்காய் ஊறுகாய்! நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்!
Amla Pickle : சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுலையில் நெல்லிக்காய் ஊறுகாய்! நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதன் துவர்ப்பு சுவையால் இதை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே நெல்லிச்சாறு, நெல்லி தேநீர் என செய்து அசத்தலாம். இதில் லேகியம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

நெல்லிக்காயின் நன்மைகள்

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது

நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.

இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது.

அல்சரை குணப்படுத்துகிறது.

நெல்லிக்காய் லேகியமாக இருந்தாலும், இது ஜாம்போல்தான் இருக்கும் எனவே இதை சாப்பாத்தி மற்றும் பிரட்டில் வைத்து சாப்பிடலாம்.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். இதில் ஊறுகாய் கூட செய்தால் சுவை நன்றாக இருக்கும். ஆந்திரா ஸ்டைலில் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இரண்டு முறையில் இந்த ஊறுகாயை செய்யமுடியும். 15 நிமிடத்தில் செய்ய முடிந்ததை நீண்ட நாள் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் பாரம்பரிய முறைப்படி செய்வதை நீங்கள் நீண்ட நாள் வைத்துக்கொள்ளலாம். ஒரு ஆண்டு கூட கெடாமல் இருக்கும். விரைவில் செய்யக்கூடிய ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 

இதை அனைத்து வெரைட்டி சாதங்களுடனும் தொட்டுக்கொள்ளலாம். இதை தோசை அல்லது பராத்தா மற்றும் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 10

நல்லெண்ணெய் – ஒரு கிண்ணம்

வெந்தயம் – 2 ஸ்பூன்

கடுகு – 2 ஸ்பூன்

வர மிளகாய் – 10

மஞ்சள் தூள் – சிறிதளவு

மிளகாய் தூள் – சிறிதளவு

கல் உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை பழச்சாறு – சிறிதளவு

(உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம் அல்லது குறைத்துக்கொள்ளலாம்)

செய்முறை

நெல்லிக்காய் அனைத்தையும் நன்றாக கழுவி, இடையில் கீறிவிடவேண்டும். அப்போதுதான் எண்ணெயில் வறுக்கும்போது வெடிக்காமல் வரும். முழுதாக விரும்பவில்லையென்றால் நறுக்கியும் எடுத்துக்கொள்ளலாம்.

நல்ல நெல்லிக்காய்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். நிறம் மாறிய பகுதிகளை நீக்கிவிடவேண்டும். நெல்லிக்காய்களை நன்றாக துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக்கூடாது.

பயன்படுத்தும் பாத்திரத்தில் கூட தண்ணீர் இருக்கக்கூடாது. காய்ந்த மிக்ஸி ஜாரில் கடுகு, வெந்தயம் என இரண்டையும் பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அது நன்றாக அரைபடவில்லையென்றால், மிளகாயையும் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் நெல்லிக்காய்களை சேர்த்து வறுக்க வேண்டும். பொன்னிறமானவுடன் ஸ்டவை அனைத்துவிட்டு, ஆறவிடவேண்டும். கொஞ்சம் ஆறியவுடன் அதில் பொடித்த பொடிகள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு மிளகாய் தூளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்தையும் நன்றாக கலந்து, இதை ஆறவைக்க வேண்டும். இப்போது எலுமிச்சையை சேர்த்தால் அது நெல்லிக்காயின் துவர்ப்பு சுவையை கொஞ்சம் குறைக்கும். உப்பு, காரம் பார்த்து, நன்றாக ஆறியவுடன், ஊறுகாய் ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

2 அல்லது 3 நாட்களில் நெல்லிக்காயில் இருந்து தண்ணீர் வெளியேறிவரும். அப்போது காய்ந்த ஸ்பூனை வைத்து நன்றாக கிளறிவிடவேண்டும். தேவைப்பட்டால் இப்போது எண்ணெய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். அது வறட்சியாக இருந்தால் அதிக எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதிக எண்ணெய் சேர்க்க வேண்டாம் என நீங்கள் விரும்பினால், எண்ணெய் குறைவாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்