தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Nuts And Seeds Smoothie This One Smoothie Twice A Week Is Enough Boost Your Vitamin B And Get Active

Nuts and Seeds Smoothie : வாரம் இருமுறை இந்த ஒரு ஸ்மூத்தி போதும்! வைட்டமின் பி அதிகரித்து சுறுசுறுப்பில் துள்ளுவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Mar 12, 2024 10:00 AM IST

Nuts and Seeds Smoothie : நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். வாரம் இருமுறை எத்தனை வாரம் வேண்டுமானாலும் பருகலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யார்வேண்டுமானாலும் பருகலாம். எவ்வித பக்கவிளைவையும் கொடுக்காது. கட்டாயம் பருகி பலன் பெறுங்கள்.

Nuts and Seeds Smoothie : வாரம் இருமுறை இந்த ஒரு ஸ்மூத்தி போதும்! வைட்டமின் பி அதிகரித்து சுறுசுறுப்பில் துள்ளுவீர்கள்!
Nuts and Seeds Smoothie : வாரம் இருமுறை இந்த ஒரு ஸ்மூத்தி போதும்! வைட்டமின் பி அதிகரித்து சுறுசுறுப்பில் துள்ளுவீர்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

வைட்டமின் பி12 ஐ அதிகரிக்கக்கூடிய ஸ்மூத்தி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம். இதை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது மற்றும் குறையாது. எனவே இதை அச்சமின்றி சாப்பிடலாம். இதை நீங்கள் வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டாலே போதும்.

முடி உதிர்வு இருக்காது. முடி நன்றாக வளரும், உடல் சோர்வு, அசதி, கை-கால் வலி என அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.

தேவையான பொருட்கள்

பாதாம் – 6

முந்திரி – 8

(முந்திரி பருப்புக்கு பதில் கைப்பிடியளவு வேர்க்கடலை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது)

அத்திப்பழம் – 1

பரங்கி விதை – ஒரு ஸ்பூன்

சியா விதை – ஒரு ஸ்பூன்

(உடலில் உள்ள கெட்ட கொழுப்பு, நரம்பில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும். வைட்டமின் பி சத்துக்கள் உள்ளது)

உலர்ந்த திராட்சை – 15

சூரிய காந்தி விதை - ஒரு ஸ்பூன்

(வைட்டமின் பி 12 நிறைந்தது)

பேரிட்சை பழம் – 2

வாழைப்பழம் – 1 (தேவையப்பட்டால் சேர்க்கலாம்)

பால் – 1 டம்ளர்

செய்முறை

பேரிட்சை தவிர அனைத்து நட்ஸ்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஓரிவு ஊறவைக்க வேண்டும்.

காலையில் இவையனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் இரண்டு பேரிச்சைப்பழம் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதனுடன் வாழைப்பழம் சேர்க்கலாம் அல்லது காய்ச்சி ஆறிய பால் சேர்க்கலாம்.

இதை காலையில் ப்ரேக் ஃபாஸ்டுக்கு பதில் அல்லது காலை உணவுக்கு முன்னர் அல்லது பின்னரும் பருகலாம். உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் பி ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

இதை வாரம் இரண்டு முறை பருகினால் போதும் உடல் சோர்வு இருக்காது. வைட்டமின் பி குறைபாடு இருக்காது. முடி உதிர்வு குறையும், முடி நல்ல அடர்த்தியாக வளர துவங்கும். நரம்பு தொடர்பான பிரச்னைகள் இருக்காது. உடல் சோர்வு இருக்காது. அனீமியா பிரச்னைகள் இருக்காது.

நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். வாரம் இருமுறை எத்தனை வாரம் வேண்டுமானாலும் பருகலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யார்வேண்டுமானாலும் பருகலாம். எவ்வித பக்கவிளைவையும் கொடுக்காது. கட்டாயம் பருகி பலன் பெறுங்கள்.

இதில் இனிப்பு சுவையை அதிகரிக்க தேன் சேர்த்தும் பருகலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்