Amla Juice : பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு! இந்த பழம் மட்டும் போதும்! தினமும் எடுக்க பலன் உறுதி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Juice : பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு! இந்த பழம் மட்டும் போதும்! தினமும் எடுக்க பலன் உறுதி!

Amla Juice : பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு! இந்த பழம் மட்டும் போதும்! தினமும் எடுக்க பலன் உறுதி!

Priyadarshini R HT Tamil
Published Apr 09, 2024 12:44 PM IST

Amla Juice : நெல்லிக்கனியை தினமும் எடுப்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு வருவதில்லையென்றும், அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. எனவே உங்கள் உணவில் கட்டாயம் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது.

Amla Juice : பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு! இந்த பழம் மட்டும் போதும்! தினமும் எடுக்க பலன் உறுதி!
Amla Juice : பிசிஓஎஸ் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு! இந்த பழம் மட்டும் போதும்! தினமும் எடுக்க பலன் உறுதி!

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி – இன்ச்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.

பின்னர் அதில் கால் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன், இவையிரண்டும் உங்களுக்கு வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் அப்படியே கூட பருகலாம். இந்துப்பு சேர்த்து பருக பிடிப்பவர்கள் அதை மட்டும் சேர்த்து பருகலாம்.

இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சதை குறைந்தாலே பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும். எனவே பிசிஓஎஸ் பிரச்னைகள் உள்ளவர்கள் இதை கட்டாயம் செய்யவேண்டும்.

இடுப்பு பகுதியில் உள்ள சதைகள் குறைந்து உங்களுக்கு பிசிஓஎஸ் பிரச்னைகளும் குணமாகும்.

நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள்

வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த வயோதிகத்தை தடுக்கும். நெல்லிக்காய் பரவலாக எங்கும் உள்ளது. எனவே அனைவரும் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. அதிகளவு கிடைக்கும் காலங்களில் இதுபோல் லேகியம் செய்து நீண்ட நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.

இதன் துவர்ப்பு சுவையால் இதை அனைவரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே நெல்லிச்சாறு, நெல்லி தேநீர் என செய்து அசத்தலாம். இதில் லேகியம் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

நெல்லிக்காயின் நன்மைகள்

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது

நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.

இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது. நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடும்போது துவர்ப்பு சுவையாக இருக்கும். அதறக்காக அதிலிருந்து பல்வேறு உணவுகளும் செய்யப்படுகின்றன.

அல்சரை குணப்படுத்துகிறது.

நெல்லிக்காய் லேகியமாக இருந்தாலும், இது ஜாம்போல்தான் இருக்கும் எனவே இதை சாப்பாத்தி மற்றும் பிரட்டில் வைத்து சாப்பிடலாம்.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். பழச்சாறு, ஊறுகாய், துவையல், சாதம், லேகியம், ரசம் என பல்வேறு வகையாக நாம் இந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.

நெல்லிக்கனியை தினமும் எடுப்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு வருவதில்லையென்றும், அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. எனவே உங்கள் உணவில் கட்டாயம் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.