தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: ‘விலா எலும்பில் குத்திய சேர்; துடிதுடித்து போன சூப்பர் ஸ்டார்; கூலியில் இவ்வளவு குழப்பமா?

Rajinikanth: ‘விலா எலும்பில் குத்திய சேர்; துடிதுடித்து போன சூப்பர் ஸ்டார்; கூலியில் இவ்வளவு குழப்பமா?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 24, 2024 11:08 AM IST

ஒரு சண்டைக்காட்சியின் போது, அந்தப் படத்தின் ஃபைட் மாஸ்டர் அமிதாப்பை எட்டி உதைக்க வேண்டும், அமிதாப் அங்கு இருக்கக்கூடிய நாற்காலியில் இடித்து விழ வேண்டும்.

வலைப்பேச்சு அந்தணன் பேட்டி!
வலைப்பேச்சு அந்தணன் பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் பேசும் போது, “ தமிழில் வெளியான கூலி திரைப்படத்தை பொருத்தவரை, அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். அந்த படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. 

கூலி என்ற பெயரில் அமிதாப்பச்சன் ஹிந்தியில் படம் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, மிகப்பெரிய விபத்து ஒன்றை அவர் எதிர்கொண்டார். ஆம், படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்து கொண்டிருந்தது. 

ஒரு சண்டைக்காட்சியின் போது, அந்தப் படத்தின் ஃபைட் மாஸ்டர் அமிதாப்பை எட்டி உதைக்க வேண்டும், அமிதாப் அங்கு இருக்கக்கூடிய நாற்காலியில் இடித்து விழ வேண்டும்.

இதில் பைட் மாஸ்டர் அமிதாப்பை கொஞ்சம் ஓங்கி மிதித்து விட, அமிதாப் நேரடியாக அந்த சேரில் விழப் போக, அந்த சேரில் எங்கேயோ ஒரு இடம் மிகவும் கூர்மையாக இருந்திருக்கிறது. அந்த கூர்மையான இடம், அவரது விலா எலும்பில் குத்திவிட்டது. 

இதில் அவர் மயக்க நிலைக்கே சென்று விட்டார். மொத்த படக்குழுவும், அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டது. அப்போது பெரிய அளவிலான மருத்துவ வசதிகள் இருந்தது என்றாலும் , போதிய அளவிலான போக்குவரத்து வசதிகள் இல்லை. 

இந்த நிலையில் தான் கன்னட நடிகர் சிவராஜ் குமார் தனியாக ஒரு ஹெலிகாப்டரை அமர்த்தி, அமிதாப்பை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வைத்தார். மும்பையில், கிட்டத்தட்ட ஒரு மாதம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. சினிமாவைப் பொறுத்தவரை, டைட்டில் என்பது மிக முக்கியமானதாக, சென்டிமென்ட் நிறைந்ததாக பார்க்கப்படும். ஏற்கனவே இந்த டைட்டில் வந்த படங்களில், நெகட்டிவான விஷயங்கள் அரங்கேறி இருக்கும் நிலையில், இந்த படப்பிடிப்பு சம்பந்தமான வேலைகளை, படக்குழு மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

லோகேஷ் கனகராஜை பொருத்தவரை, சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆகையால் இந்த படத்தை அவர் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ரீதியில் செயல்படுவார். 

அதேபோல அவருக்கு இன்னொரு சென்டிமெண்ட் இருக்கிறது. கமலின் பழைய விக்ரம் பெரிதாக ஓடவில்லை. ஆனால் தற்போது வந்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த சென்டிமென்டின் படியும், கூலி திரைப்படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. 

அதையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் என்ன திடீரென்று மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசுகிறீர்கள் என்ற எண்ணம் வரலாம். ஆனால், சினிமாவே மூடத்தனத்தின் உச்சகட்டம் தான். 

சினிமாவில் ஒரு படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விட்டால், அந்த இயக்குநருக்கு நாம் எங்கே வைத்து அட்வான்ஸ் தொகை கொடுத்தோம் என்று தயாரிப்பாளர் யோசிப்பார். 

அடுத்ததாகவும் அவர் அவருக்கு படம் செய்யும்பொழுது அதே இடத்தில் வைத்து அட்வான்ஸ் தொகையை கொடுக்கக்கூடிய சம்பவங்கள் இங்கு நடந்து தான் இருக்கிறது. 

இந்த டீசரின் இறுதியில், முடிச்சுக்கலாமா என்று ரஜினி பேசி இருக்கிறார். அதற்கு முன்னதாக விக்ரம் படத்தின் டைட்டில் டீசரில் கமல் ஆரம்பிக்கலாமா என்று கேட்டிருப்பார். இந்த மாதிரியான வார்த்தைகள் சினிமாவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்