Top 10 Cinema News: பிரசாந்தின் அந்தகன், இடைவிடாது நடித்து வரும் அஜித், இந்தியில் தி கோட்.. டாப் 10 சினிமா செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: பிரசாந்தின் அந்தகன், இடைவிடாது நடித்து வரும் அஜித், இந்தியில் தி கோட்.. டாப் 10 சினிமா செய்திகள்!

Top 10 Cinema News: பிரசாந்தின் அந்தகன், இடைவிடாது நடித்து வரும் அஜித், இந்தியில் தி கோட்.. டாப் 10 சினிமா செய்திகள்!

Marimuthu M HT Tamil Published Aug 08, 2024 08:25 PM IST
Marimuthu M HT Tamil
Published Aug 08, 2024 08:25 PM IST

Top 10 Cinema News: பிரசாந்தின் அந்தகன், இடைவிடாது நடித்து வரும் அஜித், இந்தியில் தி கோட் ஆகிய படங்கள் குறித்த அப்டேட்டும், இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் குறித்தும் அறிந்துகொள்வோம்.

Top 10 Cinema News:  பிரசாந்தின் அந்தகன், இடைவிடாது நடித்து வரும் அஜித், இந்தியில் தி கோட்.. டாப் 10 சினிமா செய்திகள்!
Top 10 Cinema News: பிரசாந்தின் அந்தகன், இடைவிடாது நடித்து வரும் அஜித், இந்தியில் தி கோட்.. டாப் 10 சினிமா செய்திகள்!

இப்படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவும், முரளி கிருஷ்ணனும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம், ஆகஸ்ட் 9ஆம் தேதியான நாளை உலகெங்கும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

இப்படத்திற்கான படப்பிடிப்பு, 2015ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு முடிவடைந்தது. குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறுபவர்கள் பற்றிய கதை என்பதால், நடிகர்களுக்காக காத்திருந்து இப்படத்தை இயக்கியுள்ளார், சில்லுக்கருப்பட்டி படப்புகழ் இயக்குநர் ஹலிதா சமீம்.

மீண்டும் நம்பிக்கை நாயகனாக உருவெடுக்கும் பிரசாந்த்:

வெகுநாட்களாக டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்து திரைக்கு வரவிருந்த அந்தகன் திரைப்படம், ஆகஸ்ட் 9ஆம் தேதியான நாளை ரிலீஸாகிறது. இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் நடிக்க, படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார், தியாகராஜன்.

மீண்டும் அடித்து ஆட களமிறங்கிய யஷ்:

கே.ஜி.எஃப் திரைப்படப் புகழ் கன்னட நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் ஆரம்பம் ஆகியுள்ளது. இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார்.

இடைவிடாத உழைப்பைக் கொட்டும் ஏ.கே:

நடிகர் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் நாட்களில் முடிவடைந்துவிடுவதாக தெரிகிறது. மேலும், ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் விரைவில் டிசம்பரில் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதற்காக நடிகர் அஜித் குமார், தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் தங்கியிருந்து மிகச்சில மணிநேரமே ஓய்வு எடுத்து நடித்து வருகிறாரார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

மாரிசெல்வராஜின் புதிய படத்துக்கு கிடைத்த மற்றொரு நல்வாய்ப்பு:

மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள புதிய திரைப்படம், வாழை. இப்படமானது வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தங்கலான் முன்பதிவு எப்போது ஆரம்பிக்குது தெரியுமா?:

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோது, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்துக்குண்டான முன்பதிவு வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி சனிக்கிழமை ஓபன் ஆகிறது.

இந்தியில் பேசப்போகும் விஜய் - என்ன விஷயம் தெரியுமா?:

நடிகர் விஜய் நடிக்கும் ’தி கோட்’ திரைப்படமானது வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வட இந்திய உரிமையை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், இந்தியில் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

மீண்டும் மிரட்டலான அறிவிப்புடன் வந்த டிமான்டி காலனி குழு:

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சாம் சி.எஸ்.ஸின் இசையில் உருவாகியிருக்கும் படம், டிமான்டி காலனி 2. இப்படத்தில் டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தில் நடித்த அருள்நிதி நடித்துள்ளார். இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமையை ஜீ 5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

புரோமோஷனுக்காக கல்லூரிகளில் வலம்வரும் கீர்த்தி சுரேஷ்:

கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ரகு தாத்தா திரைப்படம், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி,கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த பட புரோமோஷன் நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷும், இயக்குநர் சுமன் குமாரும் பங்கேற்று, படம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினர்.

பொன்னியின் செல்வனின் வானதி தட்டி தூக்கிய சமந்தாவின் மாஜி கணவர்:

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் இன்று காலை 9:42 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனை நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜூனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்தார். நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.