8 years of Demonte Colony: பேயை மட்டுமே நம்பி படமாக்கப்பட்ட 'டிமான்டி காலனி'
8 years of Demonte Colony: கதாநாயகியே இல்லாமல் துணிச்சலாக ஒருகதையை தேர்வு செய்து பேயை மட்டுமே நம்பி அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' வெளியாகி இன்றோடு (மே 22) 8 ஆண்டகள் நிறைவடைகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத், அபிசேக் ஜோசப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டிமான்ட்டி காலனி'. நண்பர்கள் நான்கு பேர் வேலை வெட்டி இல்லாமல் சென்னை, பட்டினப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர். நான்கு பேரில் பயந்த நண்பர் ஒருத்தரை பயமுறுத்துவதற்காக மற்ற மூன்று பேரும் டிமான்டி காலனியில் உள்ள பேய் பங்களாவுக்கு அந்த நண்பரை அழைத்துச் செல்கின்றனர்.
அந்த பங்களாவில் பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்து மரணம் அடைந்து, இறந்த பேய்களுடன் இவர்கள் நான்கு பேருக்கும் ஏற்படும் அனுபவமும், அங்கு கிடைக்கும் ஒரு விலை மதிப்பில்லாத ஆபரணத்தால் இவர்கள் நான்கு பேரும் அறை திரும்பிய பின்பும் நடக்கும் விஷயங்களையும் விபரீதங்களையும் விளையாட்டுகளையும் விபரிக்கிறது 'டிமான்டி காலனி'.
ஆண்டாண்டு காலமாய் தன் பங்களாவுக்குள் அமைதியாய் வாழ்ந்து வரும் டிமான்டி பேயை, அந்த ஆபரணத்தை தங்களது ரூமுக்கு எடுத்து வந்ததின் மூலம் கோபப்படுத்தி, கலாய்த்ததால் இவர்கள் நான்கு பேருக்கும் நிகழும் சம்பவங்களை உட்ச பட்ச காட்சியாக சொல்லி இருப்பார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. நிறைய பேய் படங்களில் பல காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் இதுவரை எந்த பேய் படத்திலும் சொல்லாத அளவுக்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும், கொஞ்சம் பிராமாண்டம் சேர்த்தும் கையாண்டிருப்பார் அஜய்.