Yash Toxic Movie: போதைப்பொருளுக்கு எதிரான கதை..ஸ்டைலிஷ் டான்! டாக்சிக் ஷுட்டிங் தொடங்கும் முன் யாஷ் சாமி தரிசனம்
போதைப்பொருளுக்கு எதிரான கதை, ஸ்டைலிஷ் டான் என புதிய படம் டாக்சிக் ஷுட்டிங் தொடங்கும் முன் நடிகர் யாஷ் தனது குடும்பத்தினருடன் கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராகவும், ரசிகர்களால் ராக்கிங் ஸ்டார் என்றும் அழைக்கப்படும் யாஷ், கேஜிஎஃப் 2 படத்துக்கு பின்னர் "டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்" என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
குடும்பத்துடன் சாமி தரிசனம்
இதையடுத்து நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ் தனது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் சாமி தரிசனம் செய்து வருகிறார். யாஷ் உடன் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணாவும் தனது குடும்பத்துடன் கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார். நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில், கர்நாடகாவின் சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமணியா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர்.
எந்தவொரு புதிய படத்தையும் தொடங்குவதற்கு முன்பாக, கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் கொண்டவராக யாஷ் இருந்து வருகிறார். இதை ஒரு சடங்காகவே அவர் செய்து வருவதாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் யாஷ் புதிய படம் படப்பிடிப்பு குறித்து படக்குழு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மலையாள சினிமாவில் ஹீரோயினாக நடித்த கீது மோகன்தாஸ், இந்த படத்தை இயக்குகிறார்.
எட்டுக்குள்ளே அமைந்து இருக்கும் யாஷ் புதிய படம்
யாஷ் நடிக்கும் புதிய படத்தின் ஷுட்டிங் தொடங்கு தேதி கூட்டுத்தொகை 8-8-8 ஆகும். ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு ராசியான நம்பரான 8 என கூறப்படுகிறது. மேலும் இது அவரது பிறந்த தேதியுடன் பொருந்துகிறது, அவர் பிறந்த நாளில் தான், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மெகா ஹிட் படமான பாட்ஷாவில் எட்டுக்குள்ளே வாழ்க்கை இருக்கு ராமையா என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதேபோல் யாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் இதுவரை அனைத்து விஷயங்களும் எட்டுக்குள்ளே இருப்பதாகவும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
கேஜிஎஃப்க்கு அடுத்து இடைவெளி
யாஷ் நடிக்கும் 19வது படமாக "டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்" உருவாகவுள்ளது. இந்த படத்துக்கு முன் யாஷ் நடித்த கேஜிஎஃப் சீரிஸ் படங்கள் பான் இந்தியா அளவில் ஹிட்டானது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் கடந்த 2022இல் வெளியானது. இதன் பின்னர் ஒரு வருடத்துக்கு மேலாக புதிய படங்களில் கமிட்டாகமல் இடைவெளி எடுத்திருந்தார் யாஷ். தற்போது தனது புதிய படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
டாக்சிக் பட கதை
டாக்சிக் படம் 1950-1970 காலகட்டத்தில் நடக்கும் கதையாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. போதைப்பொருளுக்கு எதிரான பின்னணியில் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் படம் உருவாக இருக்கும் இந்த படத்தில் யாஷ் ஸ்டைலிஷ் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படத்தை 2025 ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். கேஜிஎஃப் படம் போல் டாக்சிக் படமும் பான் இந்தியா படமாக தயாராகவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்