Goat Spark Song: வொய் பிளட்? சேம் பிளட்?..மீண்டும் காலை வாரிய யுவன்.. கோட் 3 வது பாடல் எப்படி இருக்கு?-thalapathy vijay the greatest of all time third single spark song out now - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goat Spark Song: வொய் பிளட்? சேம் பிளட்?..மீண்டும் காலை வாரிய யுவன்.. கோட் 3 வது பாடல் எப்படி இருக்கு?

Goat Spark Song: வொய் பிளட்? சேம் பிளட்?..மீண்டும் காலை வாரிய யுவன்.. கோட் 3 வது பாடல் எப்படி இருக்கு?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 03, 2024 06:44 PM IST

Thalapathy Vijay: யுவன் இசையமைத்து இருக்கும் கோட் படத்தில் இருந்து 3 ஆவது பாடலான ஸ்பார்க் பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Goat Spark Song: வொய் பிளட்? சேம் பிளட்?..மீண்டும் காலை வாரிய யுவன்.. கோட் 3 வது பாடல் எப்படி இருக்கு?
Goat Spark Song: வொய் பிளட்? சேம் பிளட்?..மீண்டும் காலை வாரிய யுவன்.. கோட் 3 வது பாடல் எப்படி இருக்கு?

கோட் படத்தின் 3 வது பாடல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார். இவர்கள் தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வரவேற்பை பூர்த்தி செய்யவில்லை 

முன்னதாக இந்தப்படத்தில் இருந்து விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் ஆகிய பாடல்கள் வெளியாகி இருந்தன. அந்த இரண்டு பாடல்களையும் நடிகர் விஜயே பாடியிருந்தார். குறிப்பாக சின்ன கண்கள் பாடலில் மறைந்த பாடகியும் யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணியின் குரல் செயற்கை தொழில் நுட்பத்தின் வாயிலாக கொண்டு வரப்பட்டு இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த இரண்டு பாடல்களுமே பெரிய அளவிலான வரவேற்பை பெறவில்லை. 

அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பார்க் பாடலும் எதிர்பார்ப்பை பெரிதளவு பூர்த்தி செய்யவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வருஷா பாலு இணைந்து பாடியிருக்கும் இந்தப்பாடலை, கங்கை அமரன் எழுதி இருக்கிறார்.  நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில், தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா இசை

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் 5 ம் தேதி இந்தத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.