Theatre Release: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் இத்தனையா?-list of tamil movies releasing in theatres on this week - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Theatre Release: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் இத்தனையா?

Theatre Release: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் இத்தனையா?

Aarthi Balaji HT Tamil
Aug 04, 2024 10:34 AM IST

Theatre Release: வழக்கமாக வாரம் வாரம் ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் இத்தனையா?
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் இத்தனையா?

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் மேஸ்ட்ரோ, மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது தமிழிலும் உருவாகியிருக்கிறது. தமிழில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரனும், ஆயுஷ்மான் குர்ரானா கதாபாத்திரத்தில் பிரசாந்தும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்தும் நடித்துள்ளார்கள். கார்த்திக் முக்கியத்துவம் மிக்க கேரக்டரில் நடித்துள்ளார்.

வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

பார்வையற்ற இசை கலைஞராக வரும் பிரசாந்த் தன்னை அறியாமலேயே ஒரு கொலையில் சிக்கி கொள்ள அதன் பின்னர் நடக்கும் திருப்பங்கள் தான் படத்தின் கதை என கூறப்படுகிறது. இப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகிறது.

மின்மினி

'சில்லு கருப்பட்டி', 'ஏலே' போன்ற படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம், இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், 'மின்மினி'. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதைகளத்தை கொண்ட படம் என்பதால், 2015-ம் ஆண்டு அந்த குழந்தைகளின் குழந்தைப் பருவம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கிவிட்டார்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காத்திருந்து, 'மின்மினி' படப்பிடிப்பு நடந்தது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 9ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

நாற்கரப்போர்

ஹெச். வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிகர் லிங்கேஷ், நடிகை அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இத்திரைப்படம் ஆகஸ்ட் 9ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

P- 2  இருவர்

அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் ராமலிங்கம் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவம் இயக்கியுள்ள படம் " P- 2 " இருவர் ". இந்த படம் மூலமாக மனோஜ், சித்து அறிமுகமாகிறார்கள். ஹாரர் மற்றும் திரில்லருடன் உருவாகி இருக்கும் இப்படம், 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கவுண்டம்பாளையம்

இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கத்தில் உருவான படம் 'கவுண்டம்பாளையம்'. ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர். இப்படம், 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வீராய் மக்கள்

நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், வீராய் மக்கள். இப்படத்தில் வேல ராமமூர்த்தி, மறைந்த மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, ராமா, செந்தில் குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் பேனரின் கீழ் சுரேஷ் நந்தியின் ஆதரவுடன், நாகராஜ் கருப்பையா இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.