Naga Chaitnya: இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா? அப்போ சமந்தா கதி
நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் சொல்லப்படுகிறது.

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் மிகவும் குறிப்பிடத்தக்க நட்சத்திர ஜோடி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.
விவாகரத்து பெற்ற நாகசைதன்யா பிரபல தென்னிந்திய நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் பல இடங்களில் ஒன்றாகப் பார்த்ததுதான் அந்தச் செய்திக்குக் காரணம். ஷோபிதாவை புதிய வீட்டிற்கு அழைத்து நாக சைதன்யா தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை இருவரும் மறுத்துள்ளனர்.
தற்போது டோலிவுட்டில் நாகார்ஜுனா தனது மகனை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மணமகள் ஒரு பெரிய வணிக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. ஆனால் இது குறித்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் இதுவரை உறுதி செய்யவில்லை.