தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa2firstsingletrolls: புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் சிங்கிள் குறித்த டீசர் வீடியோ.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Pushpa2FirstSingleTrolls: புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் சிங்கிள் குறித்த டீசர் வீடியோ.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Marimuthu M HT Tamil
Apr 26, 2024 03:26 PM IST

Pushpa2FirstSingleTrolls:புஷ்பா 2: தி ரூல் படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு, வீடியோவாக வெளியானதில் இருந்து, அதனை நெட்டிசன்கள் கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

புஷ்பா 2: தி ரூல் படத்தின் அல்லு அர்ஜூன் இருக்கும் காட்சி
புஷ்பா 2: தி ரூல் படத்தின் அல்லு அர்ஜூன் இருக்கும் காட்சி

ட்ரெண்டிங் செய்திகள்

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த பாடலின் 20 விநாடி கிளிப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால், அந்த 20 நொடி சவுண்ட் டிராக்கினை வைத்து பலர் ட்ரோல் வீடியோக்களை ரெடி செய்து, இணையத்தை அதிர விட்டு வருகின்றனர். 

மேலும் அது பல மீம்ஸ்களை ஏற்படுத்தும் என்று அவர்களுக்குத் தெரியாது. 

புஷ்பா புஷ்பா என வந்த மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்கள்:

தயாரிப்பாளர்கள் பகிர்ந்த குறுகிய வீடியோ கிளிப்பில், ஒரு பாடகர் ‘’புஷ்பா, புஷ்பா, புஷ்பா ராஜ்'' என வித்தியாசமான மாற்றியமைக்கப்பட்ட குரலில் பாடுகிறார். பாதியிலேயே கோரஸும் வருகிறது. அப்படியே, புஷ்பா 2: தி ரூல் படத்தில் முதல் சிங்கிள் வரக்கூடிய மே 1ஆம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் அதுவரை காத்திருக்கும் மனநிலையில் இல்லை போல.

அதனை கிண்டலாக எழுதிய எக்ஸ் தளப் பதிவர் ஒருவர்,"இது என்ன டா அப்பா" என்று எழுதியுள்ளார். இன்னொருவர், நடிகர் ரவி தேஜாவின் ஒரு வரியைப் பகிர்ந்து, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் புஷ்பா, புஷ்பா, புஷ்பா? என்றா.. போய் பீச்சில் வேர்க்கடலை விற்று வா" என கிண்டலாக எழுதியுள்ளார்.

மற்றொரு எக்ஸ் தளப் பயனர், புஷ்பா படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பிலிருந்து வந்த ஆடியோவையும், 2005ஆம் ஆண்டு வெளியான ’நுவ்வோஸ்தானன்டே நேனோதன்டானா’ என்னும் தெலுங்கு திரைப்படத்தில் ரகு பாபு நடித்த காட்சியையும் மிக்ஸ் செய்து ஒரு வீடியோவை எக்ஸ் தளத்தில் பயன்படுத்தியுள்ளார். அதில் த்ரிஷாவை ரயிலில் இருக்கும் நபர்கள் புஷ்பா புஷ்பா எனக்கூறி கிண்டல் செய்கின்றனர். 

ஒரு ரசிகர் 2023ஆம் வெளியான கன்னட திரைப்படமான வேதாவில் நடிகர் சிவ ராஜ்குமார் ஆடிய ’’புஷ்பா புஷ்பா’’ வீடியோ பாடலின் கிளிப்பைப் பகிர்ந்து ட்ரோல் செய்துள்ளார். 

இருப்பினும், இந்த பாடல் குறித்த புரோமோவை ரசிகர்கள் கொண்டாடும் விதமான சில மீம்ஸ்களும் ட்ரோல்களும் இருந்தன. அதில் குண்டூர் காரம் படத்தில் இருந்து நடிகர் மகேஷ் பாபு நடனமாடும் கிளிப்பில் ஒருவர், இந்த புஷ்பா பாடல் குறித்த ஆடியோ அறிவிப்பினை பயன்படுத்தி ரசிக்கும்படியாக மாற்றியுள்ளார். மற்றொருவர் புஷ்பா: தி ரைஸ் படத்தின் ஃபஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் வீடியோ கிளிப்களை இணைத்து, ஒரு மாஸ் வீடியோவாக அதனை மாற்றியுள்ளார்.

ஒரு வீடியோவில் அல்லு மற்றும் ராஷ்மிகா மந்தனா முந்தைய படத்தில் சாமி சாமிக்கு நடனமாடி, அறிவிப்பு வீடியோவில் இருந்து ஆடியோவுடன் ஒத்திசைத்தனர்.

புஷ்பா 2 படம் எத்தகையது?

புஷ்பா 2 திரைப்படத்தினை, புஷ்பா 1 படத்தை இயக்கிய சுகுமாரே எழுதி இயக்குகிறார். ‘’புஷ்பா 2: தி ரூல்'' படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூன் புஷ்ப ராஜ் என்னும் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்னும் கதாபாத்திரத்திலும் மற்றும் ஃபஹத், பன்வர் சிங் ஷெகாவத் ஆகிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கின்றனர். 

இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியான ’’புஷ்பா: தி ரைஸ்’’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளில் ஒரு சிறப்பு டீஸரை வெளியிட்டனர். அதில் அவர் ஜதாரா என்னும் பழங்குடியினர் கெட்டப்பில் காணப்பட்டார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்