தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika Mandanna: “ ‘புஷ்பா 2’ கதையே தெரியாது.. ஸ்ரீவள்ளி 2.0 - வ பாப்பீங்க” - பேட்டியில் குண்டை போட்ட ராஷ்!

Rashmika Mandanna: “ ‘புஷ்பா 2’ கதையே தெரியாது.. ஸ்ரீவள்ளி 2.0 - வ பாப்பீங்க” - பேட்டியில் குண்டை போட்ட ராஷ்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 14, 2024 12:45 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2: தி ரூல் படத்தில் மீண்டும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரம் குறித்து அவர் பேசி இருக்கிறார்.

Rashmika Mandanna plays Srivalli in Pushpa The Rule.
Rashmika Mandanna plays Srivalli in Pushpa The Rule.

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் தான் ஏற்று நடித்திருக்கும் வள்ளி கதாபாத்திரம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, “ அந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமாக வேலை செய்ய வேண்டி இருந்த காரணத்தால், அது சவாலாக இருந்ததோடு மட்டுமில்லாமல், வேடிக்கையாகவும் இருந்தது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காரணம் எனக்கு படத்தின் கதை தெரியாது. 

படத்தின் கதை எனக்கு தெரியாது

அந்த கதாபாத்திரத்தின் தன்மை தெரியாத காரணத்தால், எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் என்ன மாதிரியான உலகத்தை உருவாக்கி இருக்கிறோம் என்பது குறித்து எனக்குத் தெரியாது. 

எனக்கு எதுவுமே தெரியாது. அதனால், ஒவ்வொரு நாள்  செட்டிற்கு செல்லும் போதும் நான் ஏதோ மைதானத்திற்கு செல்வது போல இருக்கும்.  

ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் சூப்பராக இருக்கும்

ஆனால் இப்போது என்னால் சொல்ல முடியும். ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் சூப்பராக இருக்கும் என்று. இப்போது நாங்கள் என்ன மாதிரியான உலகத்தில் வாழ்ந்தோம் என்பது தெரியும். என்னுடைய நடித்த கேரக்டர் குறித்து தெரியும். இதில் வள்ளி 2.0 வை பார்ப்பீர்கள். ” என்று பேசினார். 

புஷ்பாவில் ராஷ்மிகா

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், ராஷ்மிகா ஸ்ரீவள்ளி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். பால் வியாபாரம் செய்யும் வள்ளி தன்னை காதலிக்கும் புஷ்பாவை முதலில் நிராகரித்தாலும், பின்னர் ஏற்றுக்கொள்வாள். அந்த பாகத்தின் இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். இரண்டாம் பாகத்தில் அதன் தொடர்ச்சியானது நடக்கும். 

அண்மையில், புஷ்பா 2: தி ரூல் படத்தின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அல்லு அர்ஜூனின் பிறந்தநாளன்று படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. தெலுங்கில் ரெயின்போ, தி கேர்ள்பிரண்ட் ஆகிய படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இவர் நடித்த அனிமல் திரைப்பட காட்சிகள் கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அது குறித்தும் அவர் பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். 

இது குறித்து பேசிய அவர், “ படத்தில் ரன்பீரின் கபூர் கதாபாத்திரத்திற்கு ஒரு விதமான பிரச்சினை இருக்கும். அந்த கதாபாத்திரம், அவரின் தந்தைக்காக எந்த எல்லைக்கும் செல்லும். படப்பிடிப்பு நடக்கும் போது, அது மட்டுமே என்னுடைய மனதில் இருந்தது. அதற்காக யாரும், எதனையும் செய்ய முடியாது. அது ஒரு கதை அவ்வளவே.

எந்த வித சாயமும் பூசாமல், உண்மையாக, சரியாக ஒரு படம் வேண்டும் என்றால் அது அனிமலாக இருக்கும். படத்தை பார்த்த பிறகு படம் பெண் வெறுப்பை பேசுகிறது அல்லது வேறு எதையாவது பேசுகிறது என்று, எதை வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், உண்மையாக படம் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை ரசித்து கடந்து சென்று விடுங்கள்” என்று பேசினார்.

மேலும் அவரிடம், படத்தின் இறுதியில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா விவாதம் செய்யும் காட்சி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பெண்களின் உடலை வைத்து ட்ரோல் செய்யும் மக்களை எனக்கு பிடிக்காது. நான் பேசும் வசனங்களையோ அல்லது வேறு எதையாவது வைத்து நீங்கள் ட்ரோல் செய்தால், அதை நான் ஏற்றுக்கொள்வேன்.

படப்பிடிப்பில் அந்த காட்சி எடுக்கப்படும் போது, செட்டில் இருந்த அனைவருக்கும் அந்த காட்சி பிடித்திருந்தது. ஆனால், ட்ரெய்லர் வெளியே வந்த உடன், நான் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டேன். ஆனால் படம் வெளிவந்த பின்னர், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு அந்த காட்சி பிடித்திருந்தது. அதை பார்த்த போது, என்னுடைய உள்ளுணர்வு சரியாக இருந்ததை உணர்ந்தேன்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்