புஷ்பா படத்தில் தான் ஏற்று நடித்த வள்ளி கதாபாத்திரம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, “ அந்த கதாபாத்திரத்திற்கு தனித்துவமாக வேலை செய்ய வேண்டி இருந்த காரணத்தால், அது சவாலாக இருந்ததோடு மட்டுமில்லாமல், வேடிக்கையாகவும் இருந்தது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. காரணம் எனக்கு படத்தின் கதை தெரியாது.

By Kalyani Pandiyan S
Apr 14, 2024

Hindustan Times
Tamil

அந்த கதாபாத்திரத்தின் தன்மை தெரியாத காரணத்தால், எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் என்ன மாதிரியான உலகத்தை உருவாக்கி இருக்கிறோம் என்பது குறித்து எனக்குத் தெரியாது. 

எனக்கு எதுவுமே தெரியாது. அதனால், ஒவ்வொரு நாள்  செட்டிற்கு செல்லும் போதும் நான் ஏதோ மைதானத்திற்கு செல்வது போல இருக்கும்.  

ஆனால் இப்போது என்னால் சொல்ல முடியும். ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் சூப்பராக இருக்கும் என்று. 

இப்போது நாங்கள் என்ன மாதிரியான உலகத்தில் வாழ்ந்தோம் என்பது தெரியும். என்னுடைய நடித்த கேரக்டர் குறித்து தெரியும். இதில் வள்ளி 2.0 வை பார்ப்பீர்கள்

புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், ராஷ்மிகா ஸ்ரீவள்ளி என்ற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். பால் வியாபாரம் செய்யும் வள்ளி தன்னை காதலிக்கும் புஷ்பாவை முதலில் நிராகரித்தாலும், பின்னர் ஏற்றுக்கொள்வாள். அந்த பாகத்தின் இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள். இரண்டாம் பாகத்தில் அதன் தொடர்ச்சியானது நடக்கும்.