Samantha Dress Change: திருமணத்தின்போது அணிந்த வெள்ளை கவுன்.. பிரிவுக்குப் பின் கருப்பாக்கிய சமந்தா - ஏன் இந்த கொலவெறி?
Samantha Dress Change: சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் சமந்தா, கருப்பு நிற பாடிஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். அது, 2017ஆம் ஆண்டில் தனது திருமணத்திற்காக அவர் அணிந்திருந்த வெள்ளை கவுன் என தற்போது தெரியவந்துள்ளது

Samantha Dress Change: திருமணத்தின் போது, நடிகை சமந்தா, தான் அணிந்திருந்த வெள்ளை கவுனை, விவாகரத்துக்குப் பின் கருப்புகவனாக மாற்றிய சம்பவம் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகை சமந்தா ரூத் பிரபு. 2010ஆம் ஆண்டில் விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான, ‘’யே மாயா சேசாவே’’வில் ஜெஸ்ஸி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதேநேரம் தமிழில் இவர் ‘’பாணா காத்தாடி'' என்னும் படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அதன்பின், தமிழில் மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், பெங்களூரு நாட்கள், தெறி, 24, மெர்சல், இரும்புத்திரை, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், காத்துவாக்குல ரெண்டு காதல் எனப் பல்வேறு ஹிட் படங்களில் தமிழில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
சமந்தா ரூத் பிரபு திரையுலகில் அறிமுகமாகி 14 வருடங்கள் ஆகிறது. குறிப்பாக, ’’யே மாயா சேசாவே’’ என்ற தெலுங்குப் படத்தில் முதல்முறையாக நடிக்கும்போது, சக நடிகரான நாக சைதன்யாவுடன் நெருங்கிய நண்பர் ஆனார். பின் இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு,அக்டோபர் 6ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். ஒரு இந்து முறைப்படியும், ஒரு கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.