தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: "ஓங்கி மிதிச்சா ஒன்னரை டன் வெயிட்டு டா" - கிக் பாக்ஸிங்கில் மிரட்டிய சமந்தா

Samantha: "ஓங்கி மிதிச்சா ஒன்னரை டன் வெயிட்டு டா" - கிக் பாக்ஸிங்கில் மிரட்டிய சமந்தா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 17, 2024 08:00 PM IST

கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபடும் விடியோவை தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா. உடல் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தும் சமந்தா, தற்போது கிக் பாக்ஸிங் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

கிக் பாக்ஸிங்கில் மிரட்டும் சமந்தா
கிக் பாக்ஸிங்கில் மிரட்டும் சமந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

கிக் பாக்ஸிங் பயிற்சி

இதையடுத்து சமந்தாவின் லேட்டஸ்ட் பக்கெட் லிஸ்டாக கிக் பாக்ஸிங் பயிற்சி இணைந்துள்ளது. அதன்படி கிக் பாக்ஸிங்கில் தீவிர பயிற்சியில் ஈடுபடும் அவர், அதன் விடியோவை ஸ்டேட்டஸாக தனது இன்ஸ்டாவில் வைத்துள்ளார்.

தனது பயிற்சியாளருடன் கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபடும் சமந்தா, பயிற்சியாளர் சொல்லி கொடுத்த மூவ்மெண்ட்களை பக்காவாக செய்கிறார். அதில் , "ஒரு நாள், ஒரு சமயத்தில்" என குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

நடிப்பிலிருந்து பிரேக்

மயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் பாதிப்புக்குள்ளான சமந்தா, நடிப்பிலிருந்து சில காலம் ஓய்வில் இருந்தார். அந்த காலகட்டத்தில் மருத்துவ சிகிச்சையுடன் தியானம், மனவளக்கலை, யோகா உள்பட ஹாபிக்களை வளர்த்துக்கொண்டார். அத்தோடு இல்லாமல் அதுதொடர்பாக பதிவுகளை சேகரித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார். சமீபத்தில் குதிரையேற்ற பயிற்சி தொடர்பான விடியோ மற்றும் புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது அவரது புது ஹாப்பியாக கிக் பாக்ஸிங்கும் சேர்ந்துள்ளது. மனம் மற்றும் உடல் நலத்தை பேனி காக்கும் விதமாக பல்வேறு விதமான விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

சமந்தாவுக்கு பாதிக்கப்பட்ட மயோசிடிஸ் நோய் பாதிப்பானது, உடலில் உள்ள தசைகள் வலுவிழந்து ஒரு கட்டத்தில் உடலின் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கும். இதுதொடர்பாக வெளிப்படையாக தெரிவித்த அவர், அந்த நோய் பாதிப்பின் தாக்கத்தில் இருந்து விடுபடுவது குறித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தார்.

நடிப்பில் கம்பேக்

கடந்த சில வாரங்களுக்கு முன் நடிப்பு பக்கம் மீண்டும் திரும்பவதாக அறிவத்தார் சமந்தா. இது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து சமந்தாவின் கம்பேக் படமாக ஹாலிவுட் சீரிஸின் ரீமேக் சிட்டாடெல்: ஹனி பனி விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்த இந்த சீரிஸில் சமந்தாவுக்கு ஜோடியாக, பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ளார். இதில் ஆக்‌ஷன், ரெமான்ஸ் காட்சிகளில் சமந்தா புகுந்து விளையாடியுள்ளாராம்.

சமீபத்தில் இந்த சீரிஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தா, ஆக்‌ஷன் காட்சிகளுக்காக கடுமையாக உழைத்ததாக தெரிவித்திருந்தார். தி பேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் - டிகே ஆகியோர் சிட்டாடெல்: ஹனி பன்னி சீரிஸை இயக்கியுள்ளார்.

இன்ஸ்டாவில் ஹெல்த் போட்காஸ்ட்

அத்துடன் நடிகை சமந்தா தனது தோழியுடன் இணைந்து இன்ஸ்டாவில் ஹெல்த் போட்ஸ்கேஸ்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். உடல்நிலை, ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு விஷயங்களை அதுதொடர்பான நிபுணர்களுடன் இணைந்து இதில் உரையாடி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்