தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: மேலாடையின்றி புகைப்படம்! ஒற்றை போட்டோவால் இணையத்தை பற்ற வைத்த சமந்தா - தமன்னாவின் ரியாக்‌ஷன்

Samantha: மேலாடையின்றி புகைப்படம்! ஒற்றை போட்டோவால் இணையத்தை பற்ற வைத்த சமந்தா - தமன்னாவின் ரியாக்‌ஷன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 11, 2024 05:19 PM IST

மேலாடையின்றி வெறும் சூட் மட்டும் அணிந்துகொண்டு சமந்தா இன்ஸ்டாவில் புகைப்படத்தை பகிர்ந்து சமூக வலைத்தளங்களை கவர்ச்சி நெருப்பில் பற்றி வைத்துள்ளார்.

சமந்தா பகிர்ந்த ஹாட் புகைப்படம்
சமந்தா பகிர்ந்த ஹாட் புகைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிப்பு தவிர பேஷன் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சமந்தா புதிய விதமான ஆடைகள், மேக்கப், ஹேர் ஸ்டைல் என அவ்வப்போது போட்டோஷுட் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி லைக்ஸ்களையும், ஷேர்களையும் குவித்து வருவார்.

மேலாடையின்றி கவர்ச்சி புகைப்படம்

அந்த வகையில் சமந்தா கவர்ச்சி புகைப்படங்கள் இன்று தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ட்ரெண்டாகியுள்ளார். அதில் கருப்பு நிறத்திலான பேன்ட் மற்றும் சூட் அணிந்து வழக்கம்போல் தனது கவர்ந்திழுக்கும் பார்வையால் கிறங்கடித்துள்ளார். இதில் ஹைலைட்டான விஷயமாக சமந்தா மேலாடை எதுவும் அணியாமல் வெறும் சூட் மட்டும் அணிந்திருப்பதோடு, தனது முன்னழகின் கவர்ச்சி தரிசனத்தையும் தந்துள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிந்து வருவதோடு, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமந்தா தனது இன்ஸ்டா பதிவின் கேப்ஷனில், "பேஷ்ன் பேபி" என்று கருப்பு நிற ஹார்ட் எமோஜியுடன் குறிப்பிட்டுள்ளார். ஒற்றை புகைப்படம் மூலம் இணையவாசிகளின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுக்கும் வல்லமை கொண்டவரான சமந்தா, இன்றையை பொழுது தன்னை பற்றிய பேச்சாக சமூக வலைத்தளத்தில் இருக்குமாறு மாற்றியுள்ளார்.

சமந்தாவின் புகைப்படத்துக்கு ரசிகர்கள் மட்டுமல்லா, பிரபலங்களும் தங்களது ரியாக்‌ஷனை வெளிப்படுத்தியுள்ளனர். சமந்தாவின் இந்த ஹாட் லுக்குக்கு நடிகை தமன்னா பயர் எமோஜியை பகிர்ந்துள்ளார்.

சமந்தா அடுத்த படம்

ஹாலிவுட் வெப்சீரிஸான் சிட்டாடெல் இந்திய பதிப்பில் சமந்தா நடித்துள்ளார். ராஜ் - டிகே இயக்கியிருக்கும் இந்த சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

சிட்டாடல் பற்றி சமந்தா

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிட்டாடல் பற்றி பேசிய நடிகை சமந்தா, " தி பேமிலி மேன் சீரிஸின் ராஜி கதாபாத்திரத்தை ஒப்பிடுகையில், இந்த தொடரில் ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் கடினமாக இருந்தது. சிட்டாடல் தொடரை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளேன்" என்றார்.

ஒரிஜினல் சிட்டாடல் சீரிஸில் ஹாலிவுட் நடிகர்கள் ரிச்சர்டு மேடன் - பிரியங்கா சேப்ரா நடித்திருப்பார்கள். ஸ்பை ஆக்‌ஷன் சீரிஸான இந்த தொடரில் 90களின் பின்னணியில் மென்மையான காதல் கதையும் இடம்பிடித்திருக்கும்.

சிட்டாடல் இந்திய பதிப்பு சிட்டாடல் ஹனி பன்னி என்ற பெயரில் அமேசான் ப்ரைமில் ஸ்டிரீம் ஆக இருக்கிறது.

சமந்தா போட்காஸ்ட்

சமந்தா தனது இன்ஸ்டாவில் ஹெல்த் தொடர்பான போட்காஸ்ட் ஒன்றையும் சமீப காலமாகவே பகிர்ந்து வருகிறார். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உடல் ஆரோக்கியம், பிட்னஸ், மன நல ஆரோக்கியம் என பல்வேரு விஷயங்கள் குறித்து இந்த போட்காஸ்டில் நிபுணர்களுடன் இணைந்து விவாதித்திக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே  உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்